புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிறந்தநாள் ஸ்பெஷலாக லோகேஷுக்கு நச்சுன்னு கிடைத்த முத்தம்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

லோகேஷ் கனகராஜ் தற்போது மிகப்பெரும் நட்சத்திர பட்டாளங்களை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். காஷ்மீரில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இது குறித்து வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளிவந்துள்ள போட்டோ சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

37 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் லோகேஷ்

lokesh-leo
lokesh-leo

அந்த வகையில் லோகேஷ் இன்று தன்னுடைய 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனால் இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சோசியல் மீடியாவில் இது குறித்த ஹேஷ் டேக்கும் பயங்கர ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

Also read: 35 வெரைட்டி காட்டிய லோகேஷ்.. சிங்கம் பிடரி போல் இருக்கும் விஜய்யின் நியூ லுக்

இந்நிலையில் தற்போது இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகி உள்ளது. அதன்படி காஷ்மீரில் இருக்கும் படக்குழுவினர் அனைவரும் லோகேஷுக்காக சர்ப்ரைஸ் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதில் திரிஷா ,சஞ்சய் தத் உட்பட பலரும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி உள்ளனர்.

திரிஷா – சஞ்சய் தத்

trisha-sanjay-dutt
trisha-sanjay-dutt

அதுமட்டுமல்லாமல் லோகேசுடன் மிகவும் நெருக்கமாக அவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோவும் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் திரிஷா கருப்பு நிற உடையில் முகம் கொள்ள சிரிப்புடன் லோகேஷை அணைத்தபடி ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

Also read: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மாசாக இருக்கும் தளபதி.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

அது மட்டுமல்லாமல் உதவி இயக்குனர்கள் உட்பட பலரும் லோகேஷுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் லோகேஷை இறுக்கி அணைத்தபடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சஞ்சய் தத் – லோகேஷ்

lokesh-sanjay-dutt
lokesh-sanjay-dutt

இதில் அனைவரும் கவனிக்கும் படியாக இருந்த ஒரே ஒரு விஷயம் பார்ட்டியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் கருப்பு நிற உடையில் இருந்தது தான். அந்த உடையில் தான் லோகேஷின் பிறந்த நாளை அனைவரும் தெறிக்க விட்டிருக்கின்றனர். இன்று காலை முதலே லியோ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த போட்டோக்கள் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Also read: கடைசியாக அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. லியோவுக்கு பின் எடுக்க போகும் புது அவதாரம்

Trending News