திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லோகேஷுடன் கைகோர்க்கும் காவல்துறை.. தளபதி 67ல் இணைய இப்படி ஒரு வாய்ப்பா?

2016 ஆம் ஆண்டு மாநகரம் படத்தை இயக்கி அதைத்தொடர்ந்து கைதி, மாஸ்டர், உலகநாயகனின் விக்ரம் போன்ற 3 படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது தளபதி விஜய்யின் 67-வது படத்தை இயக்க உள்ளார்.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நோக்கத்தில் தன்னுடன் பணிபுரிவதற்கான உதவி இயக்குனர்களை வித்தியாசமான முறையில் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

Also Read: 6 அடி KGF அரக்கனுடன் மோதப்போகும் விஜய்.. தளபதி-67 வில்லனாக மாறிய பெண்களின் ரொமான்டிக் ஹீரோ

இதற்காக கோவை மாநகர காவல்துறை மற்றும் சமூக இயக்கங்கள் சேர்ந்து கோயம்புத்தூரில் உள்ள இளைஞர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம் இயக்க ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளனர்.

ஐந்து நிமிடத்தில் இந்த குறும்படம் எடுக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் உதவி இயக்குனராக பணி புரிய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கோவை மாநகர காவல் துறை சொல்லி இருக்கிறது.

Also Read: பொன்னின் செல்வன் படத்திற்குப் பின் மார்க்கெட்டை பிடிக்கும் த்ரிஷா.. லோகேஷ்க்கு இப்படி ஒரு ஆசையா.?

சமூக அக்கறையுடன் காவல்துறை செயல்பட்டிருக்கும் இந்த அணுகுமுறை தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களுக்கும், தற்போது டாப் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ்க்கும் மிகப்பெரிய பெருமையாக இருக்கும்.

இந்த செய்தியை அறிந்து சினிமாவில் ஆர்வம் கொண்டிருக்கும் இளைஞர்கள் பலரும், தற்போது சமூகத்தை ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு குறும்படங்களை ஆர்வத்துடன் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் தளபதி 67 படத்தில் லோகேஷ் உடன் இணைந்து உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க போகிறது.

Also Read: பெரியதலைக்கு வலை விரித்திருக்கும் லோகேஷ்.. கனவு கைகூடுமா.?

Trending News