சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அட கடவுளே எப்படி இருந்த மனுஷன்.. லோகேஷ் குடும்பத்தில் கும்மி அடித்த கமல், ஸ்ருதி

Lokesh: கடந்த வாரம் லோகேஷ், ஸ்ருதி ஹாசன் உடன் இணைந்து நடித்த இனிமேல் ஆல்பம் பாடல் வெளியாகியிருந்தது. அதிலிருந்து இவருக்கு ஒரே பிரச்சனையாக தான் இருக்கிறது.

ஏனென்றால் ஆக்சன் கிங் என்று நாம் நினைத்திருந்த லோகி அதில் ரொமாண்டிக் பாயாக மாறி இருந்தார். அதிலும் ஸ்ருதி உடன் அவருக்கு இருந்த கெமிஸ்ட்ரி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

உண்மையிலேயே இந்த ரீல் ஜோடி சூப்பர் என்ற கமெண்ட்டுகளும் வந்தது. அதே சமயம் இருவருக்கும் இடையில் ஏதாவது இருக்குமோ என்ற பேச்சுக்களும் ஒரு பக்கம் புகைய தொடங்கியது.

லோகேஷ் துதிபாடும் ஸ்ருதி

அதற்கேற்றார் போல் ஸ்ருதியும் லோகேஷை தாறுமாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கு கூட லோகியை பிடிக்கும் என கூறி இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க லோகேஷ் அவர் குடும்பத்தை பற்றிய கேள்விகள் கேட்டால் மட்டும் டென்ஷன் ஆகிவிடுகிறார். பத்திரிகையாளர் ஒருவர் இந்த பாடலை பார்த்து உங்க மனைவியின் ரியாக்சன் என்ன என கேட்டிருந்தார்.

உடனே டென்ஷனான லோகேஷ் பர்சனல் பத்தி வேண்டாம் என முடித்துக் கொண்டார். ஏனென்றால் இந்த பாடல் வெளிவந்த பிறகு அவர் வீட்டில் ஒரே பிரச்சனையாக இருக்கிறதாம்.

ஆக மொத்தம் நல்லா இருந்த அவருடைய குடும்பத்தில் அப்பாவும் மகளும் சேர்ந்து கும்மி அடித்து விட்டார்கள். அட பாவமே எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டாரே என்ற பேச்சுக்களும் தற்போது சத்தம் இல்லாமல் எழுந்துள்ளது.

 

Trending News