வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஒன் லைன் ஸ்டோரி கேட்டு நடிப்பதற்கு அடம் பிடித்த பாலிவுட் நடிகர்.. சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார்கள். பொதுவாக லோகேஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி சில விஷயங்களை தனது படங்களில் கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். விக்ரம் படத்தில் கூட கைதி படத்தின் கதாபாத்திரங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.

அந்த வகையில் தளபதி 67 படத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி பல விஷயங்களை லோகேஷ் உள்ளடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.

Also Read : வேகம் எடுக்கும் தளபதி 67.. முகமூடி கூலர்ஸ் போட்டு கெத்தாக வந்த திரிஷாவின் வைரல் போட்டோ

இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகரிடம் லோகேஷ் ஒன் லைன் ஸ்டோரி கூறி சம்மதம் வாங்கி உள்ளார். அந்த அளவுக்கு தளபதி 67 கதையை லோகேஷ் செதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் சினிமாவில் குணச்சித்திரா மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சய் தத்.

அதுவும் கே ஜி எஃப் படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய அளவில் கவரப்பட்டது. இந்நிலையில் சஞ்சய் தத் லோகேஷிடம் ஒரு வரியில் கதையைக் கேட்டு மிகவும் பிரம்மித்து போய் தளபதி 67 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தளபதி 67 அப்டேட்.. உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா

மேலும் சஞ்சய் தத் தளபதி 67 படத்தில் நடிக்கப் போவதை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளது. மேலும் சஞ்சய் தத் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக தான் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக உள்ளது.

தளபதி 67 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்

sanjay-dutt-thalapathy-67

Also Read : தளபதி 67 ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜயின் வலது கை.. பூஜை நாட்களை டார்கெட் செய்து கல்லா கட்டும் லோகேஷ்

Trending News