திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

லோகேஷ் LCU-வில் இணைந்த சூப்பர் ஸ்டார்.. கமலஹாசனுடன் செய்ய போகும் அடுத்த சம்பவம்

Kamal Movie Update: தற்சமயம் கமலஹாசன் பெரிய பெரிய படங்கள் வரிசையாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவே இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் தினந்தோறும் கமலஹாசன் லோகேஷ் பற்றிய தகவல்கள் ஏதோ ஒன்று வந்து கொண்டே இருக்கின்றன.

அந்த வரிசையில் தற்பொழுது கமலஹாசன் உடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம். தற்போது அட்லி இயக்கும் ஜவான் படப்பிடிப்பில் இருக்கும் ஷாருக்கான் அடுத்ததாக கமலுடன் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார்.

Also Read: லியோ படத்தில் இணைந்த 24 பான் இந்தியா ஸ்டார்ஸ்.. லிஸ்ட்ட பாத்துட்டு எதை விட எதை வைக்க, விழி பிதுங்கும் பிரபலம்

அநேகமாக இது விக்ரம்-2 இருக்கும். இதில் இருவரும் இணைந்து நடிக்க கமல் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே முதல் பாகத்தில் பின்னி பெடல் எடுத்த உலக நாயகன் அதைவிட பிரமாதமாக இரண்டாம் பாகத்தில் சம்பவம் செய்ய காத்திருக்கிறார்.

பொதுவாக லோகேஷ் தனது படத்தில் தமிழ் நடிகர்களை மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் இருக்கும் திறமையான நடிகர்களை ஒரே படத்தில் இணைத்து பார்ப்பார். இதுதான் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Also Read: விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. மொத்த பெயரையும் சல்லி சல்லியா உடைச்சிட்டாங்களே

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் எல்சியு-வில் ஷாருக்கான் இணைவது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடிய விரைவில் இதற்கான முழு தகவல்கள் வெளிவரும். அதே சமயம் லோகேஷும் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விக்ரம் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலையில் தான் தீவிரமாக இறங்கப் போகிறார்.

அப்படி இருக்கும் போது விக்ரம் முதல் பாகத்தில் ரோலக்ஸ் எந்த அளவிற்கு பேசினார்களோ, அதே போலவே இரண்டாம் பாகத்திலும் ரொம்பவே வித்தியாசமான ஒரு கேரக்டரை லோகேஷ் உருவாக்க போகிறார். அதில் தான் ஷாருக்கானை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். விரைவில் ஷாருக்கானிடமும் லோகேஷ் கதை சொல்லி ஓகே வாங்கி விடுவார்.

Also Read: லியோவை தொடர்ந்து தலைவர் 171ல் இணைந்த முக்கிய பிரபலம்.. தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் லோகேஷ்

Trending News