திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எல்லாத்துக்கும் கட்டையை போடும் விஜய்.. லியோ பட விஷயத்தில் வெறுத்துப் போன லோகேஷ்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்ட தருவாயில் இருக்கிறது. இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை அதிக எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகிறது. எப்பொழுது திரையரங்குகளில் வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணி அதிரிபுதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லோகேஷ் உடைய படம் எப்படி இருக்கும் என்று நாம் இதற்கு முன்னதாகவே பல படங்களில் பார்த்திருக்கிறோம். அத்துடன் விஜய் படம் என்றாலே கண்டிப்பாக வெற்றிவாகை சூடி வசூலில் முதலிடத்தில் வரும்.

Also read: விஜய் பட வில்லனை உறுதி செய்த மகிழ் திருமேனி.. நியூ லுக்கில் மிரட்ட வரும் ஏகே

அப்படி இருக்கும் பொழுது இவர்கள் இருவர் கூட்டணியில் வெளிவர இருக்கும் படம் பட்டைய கிளப்ப போகிறது. மேலும் இப்படம் ரிலீசுக்கு முன்பே நல்ல பிசினஸ் ஆகியுள்ளது. போதாக்குறைக்கு இன்னும் இப்படத்தின் மூலம் பெத்த லாபத்தை பார்க்கலாம் என்று படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து விஜய் இடம் பல கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

ஆனால் விஜய் அதை எதையுமே காது கொடுத்து கேட்காமல், லோகேஷ் என்ன சொன்னாலும் நோ நோ என்று சொல்லி வருகிறார். ஏற்கனவே இந்த படம் வெளிநாட்டு உரிமையில் கிட்டத்தட்ட 60 முதல் 70 கோடி வரை லாபத்தை பார்த்துள்ளது. இதை இன்னும் அதிகரிக்க படத்திற்கு ஒரு பிரமோஷன் கொடுத்தால் அதிக இலாபம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

Also read: விஜய்யை விட அஜித்துக்கு ஜோடியாக நடித்ததால் வந்த புகழ்.. வீட்டிற்கு அதே பெயரை வைத்து அழகு பார்த்த நடிகை

ஆனால் அதையெல்லாம் வேண்டாம் என்று விஜய் மறுத்துவிட்டார். ஏற்கனவே படப்பிடிப்பின் போது விஜய்க்கும் லோகேஸ்க்கும் சின்ன சின்ன வாய்க்கா தகராறுகள் ஏற்பட்டிருக்கிறது. அதை மனதில் வைத்து தான் என்னமோ லோகேஷ் என்ன சொன்னாலும் வேண்டாம் என்று சொல்கிறாரோ என்னவோ.

கடைசியாக நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ லான்ச் வைக்கலாம் என்று லோகேஷ் சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டார். அதற்கு பதிலாக கோயம்புத்தூர் மற்றும் திருச்சி போன்ற இடத்தில் வையுங்கள் என்று கண்டிஷன் ஆக கூறி இருக்கிறார். இதனால் லோகேஷ் ரொம்பவே வெறுத்துப் போய் இருக்கிறார்.

Also read: லியோவுக்கு எண்டு கார்டு, பூசணிக்காய் உடைக்கும் லோகேஷ்.. வேற லெவலில் வெளிவர உள்ள டீசர்

Trending News