ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

லோகேஷ்க்கு முன்பே அந்த ஸ்டைலை ஃபாலோ பண்ணிய எம்ஜிஆர் தயாரிப்பாளர்.. 60களிலேயே இப்படி ஒரு ஜாம்பவானா?

Director Lokesh: லோகேஷ் கனகராஜை பொறுத்தவரையில் தனக்கென தனி ஸ்டைல் வைத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார். மாநகரம் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய லோகேஷ் கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது தமிழ் சினிமா லியோ படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் லோகேஷ் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களிடையே வித்தியாசமாக இருக்கிறது. படத்தின் பூஜை போடும்போது ரிலீஸ் தேதியையும் லோகேஷ் அறிவித்து விடுகிறார். பொதுவாக சொன்ன தேதியில் படத்தை எடுத்து முடிப்பது சாதாரண விஷயம் அல்ல. இதில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Also Read : லியோவை விட அதிக விலைக்கு போன விஜய் 68.. அநேகத்துக்கு வெங்கட் பிரபுவிடம் அசிங்க பட போகும் லோகேஷ்

சொந்த பிரச்சனை மற்றும் இயற்கை சீற்றங்களால் கூட படப்பிடிப்பு தாமதமாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் லியோ படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போது ஆயுத பூஜைக்கு இப்படம் ரிலீஸ் ஆவதையும் அறிவித்து விட்டனர். இப்போது தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்த பிறகு 60களிலேயே இதை கடைப்பிடித்துள்ளார் எம்ஜிஆரின் தயாரிப்பாளர் ஒருவர்.

அதாவது எம்ஜிஆர் உடன் ஆரம்ப காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பராக பழகி வந்தவர் தான் சின்னப்பா தேவர். அந்த காலத்தில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த இவர் எம்ஜிஆரை வைத்து நிறைய படங்கள் எடுத்திருக்கிறார். முதலில் ஒரு குழுவை அமைத்து கதையை தயார் செய்ய சொல்லி விடுவாராம்.

Also Read : லியோ ஆடியோ வெளியீடு, மண்ணை அள்ளிப் போட்ட லோகேஷ்.. திருப்பி கொடுக்க நினைத்த தளபதிக்கு விழுந்த அடி

மேலும் அந்த கதையில் அதிகம் சென்டிமென்ட் காட்சிகள் ஆக்சன் காட்சி என ஒரு மசாலா படமாக இருக்க வேண்டும் என்பதில் சின்னப்பா தேவர் முனைப்புடன் இருப்பார். கதை பிடித்திருந்தால் உடனே நடிகர், நடிகைகளை தேர்வு செய்து ஒரே செக்கில் மொத்த தொகையையும் கொடுத்து விடுவாராம். அதோடு மட்டுமல்லாமல் பூஜை போடும்போது ரிலீஸ் தேதியையும் அறிவித்து விடுவாராம்.

அந்த படத்தின் மூலம் தனக்கு வரும் லாபத்தை மூன்று பங்காக போட்டு ஒன்று தனக்கு, மற்றொன்று நண்பர்களுக்கு கொடுத்து விடுவாராம். மேலும் மூன்றாவது பங்கை கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்து விடுவாராம். இவருடைய தயாரிப்பில் 26 படங்களில் எம்ஜிஆர் நடித்திருக்கிறாராம். 60களிலேயே இப்படி ஒரு ஜாம்பவானா என பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் சின்னப்பா தேவர்.

Also Read : லோகேஷ் வந்து கூப்பிட்டாலும், அது இல்லன்னா நடிக்க மாட்டேன்.. 9 வருடத்திற்கு பிறகு ரீ என்ட்ரிக்கு தயாரான சாக்லேட் பாய்

- Advertisement -spot_img

Trending News