திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோ படத்திற்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் வெங்கட் பிரபு.. விஜய் செய்த செயலால் ஹேப்பியான லோகேஷ்

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முக்காவாசி படப்பிடிப்பு நிறைவடைந்து. கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

முன்பு எங்கு பார்த்தாலும் லியோ படத்தை பற்றிய பேச்சு தான் இணையத்தில் வைரலாக பேசப்பட்டது. ஆனால் இப்போது நிலைமையை மாறிப்போனது. காரணம்வெங்கட் பிரபு அடுத்தடுத்து லியோ படத்திற்கு எதிராக ஆப்படித்துக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்த விஜய் இப்போது செய்திருக்கும் செயலைப் பார்த்து லோகேஷ் செம ஹேப்பி ஆனார்.

Also Read: விக்ரம் வசூல், லியோ பிசினஸ் மொத்தமாக அள்ளிய ஜெயிலர்.. சம்பவம் செய்யும் நெல்சன்

லியோ படம் முடிவதற்குள் வெங்கட் பிரபுவுடன் விஜய் சேர்ந்து படம் பண்ணுவது உறுதியானது. உடனே இந்த படத்திற்கான அறிவிப்பும் வெளிவந்தது. வெங்கட் பிரபுவின் 10 வருட காத்திருப்புக்கு கிடைத்த பலனாகவே இதை பார்க்கின்றனர். வெங்கட் பிரபு இருந்தால் நிச்சயம் யுவன் சங்கர் ராஜாவும் அந்த படத்தில் இருப்பார்.

அப்படித்தான் தளபதி 68 படத்தினை வெங்கட் பிரபு- யுவன் சங்கர் ராஜா- விஜய் கூட்டணியில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனால் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கும் விஜய் 68 படத்தை பற்றி மட்டுமே அதிக பேச்சுகள் எழுகின்றன. லியோ படத்தை ரசிகர்கள் அப்படியே மறந்து விட்டனர்.

Also Read: தந்திரமாய் செயல்படும் வெங்கட் பிரபு, விஜய்.. முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க போடும் திட்டம்

இந்த படத்தில் யார் நடக்கிறார்கள் என்ன கதை என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். இதற்கிடையில் லியோ படத்தின் பேச்சு காணாமல் போனது. இதற்காகத்தான் விஜய், வெங்கட் பிரபுவிடம் இதைப் பற்றி எதையும் சொல்ல வேண்டாம். லியோ படம் வந்த பிறகு சொல்லலாம் என கூறியிருந்தார்.

சின்ன செய்தியாக தான் வெளியிட்டார்கள். அதற்கே இப்படி லியோ படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரியாது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளார். ஏனென்றால் இவரை பத்திரிகையாளர்கள் பின்தொடருவார்கள். தற்போது இவரை விட்டு விட்டு வெங்கட் பிரபுவை அப்டேட் கேட்டு வருகிறார்கள். இதனால் தப்பித்தோம் என மகிழ்ச்சியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Also Read: பணத்தாசை, எல்லை மீறிய கவர்ச்சி.. அரசனை நம்பி புருசனை கைவிட்ட விஜய் பட நடிகை

Trending News