புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கூடவே இருந்து சோலியை முடித்த செவ்வாழை.. ஆணவ பேச்சால் உக்கிரமான கலாநிதி, பதட்டத்தில் லோகேஷ்

Lokesh-Kalanithi Maaran: எனக்குன்னே வருவீங்களா என்பது தான் இப்போது லோகேஷின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும். அந்த அளவுக்கு அவரை பதட்டப்பட வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தற்போது லியோ படத்தை முடித்துள்ள அவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில் நேற்று நடந்த லியோ சக்சஸ் மீட் கலாநிதி மாறனை கொந்தளிக்க வைத்துள்ளது. இது எதிர்பார்த்ததுதான் என்றாலும் சம்மந்தமே இல்லாமல் லோகேஷின் தோஸ்த் ரத்னகுமார் கிளப்பிய பிரச்சனை தான் யாரும் எதிர்பாராதது. அதாவது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா பருந்து கதைக்கு பதிலடியாக இவர் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசிச்சா கீழே தான் வரணும் என்று ஆணவத்துடன் பேசி இருந்தார்.

இது இப்போது மீடியாவுக்கு சரியான தீனி போட்டு வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் தற்போது மிகவும் உக்கிரத்துடன் இருக்கிறதாம். இதனால் பதட்டத்தில் இருக்கும் லோகேஷ் இதை எப்படி சரி செய்வது என்ற ஒரு யோசனையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. உண்மையில் ரத்னகுமார் மனதில் இருந்த காண்டு தான் இப்படி மேடையில் வெளிப்பட்டிருக்கிறது.

Also read: சூப்பர் ஸ்டாரை குத்தி காட்டிய லோகேஷின் கூட்டாளி.. அனல் பறந்த லியோ சக்ஸஸ் மீட் மேடை

ஏனென்றால் லோகேஷ் வேறு அவர் வேறு கிடையாது. அந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இவர்கள் ஒன்றாகவே இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். அப்படித்தான் லியோவிலும் ரத்ன குமாரின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இரண்டாம் பாதியை இவர்தான் இயக்கியதாக கூட ஒரு பேச்சு இருக்கிறது.

அதனால்தான் லியோ தடுமாறியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் பார்த்த சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினி இருவரும் லோகேஷை கூப்பிட்டு உங்க நண்பர் இதுல வரக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்களாம். அதற்கு சம்மதித்த லோகேஷும் இப்போது தலைவர் 171 கதையை தனி ஒருவனாக செதுக்கி கொண்டிருக்கிறார்.

இப்படி தன்னை ஆட்டத்திலிருந்து விலக்கி விட்ட கடுப்பில் தான் ரத்னகுமார் மேடையில் சூப்பர் ஸ்டாரை மறைமுகமாக குத்தி காட்டி பேசி இருக்கிறார். ஆனால் இது லோகேஷுக்கு தான் பிரச்சனையாக முடிந்திருக்கிறது. இப்படி நண்பன் என்று சொல்லி கூடவே இருந்த செவ்வாழை பகையை மூட்டி விட்டதில் அவர் மேலிடத்துக்கு பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார். இதுதான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரப்பரப்பை கிளப்பியுள்ளது.

Also read: லியோ சக்சஸ் மீட்டை வைத்தே பல கோடி சம்பாதித்த லலித்.. அம்பலமான உண்மை

Trending News