புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வலிமையில் வினோத் செய்த தவறை விக்ரமில் திருத்திய லோகேஷ்.. 2ம் பாதியில் சம்பவம் கன்ஃபார்ம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு கமலின் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் உள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்ரம் படத்தின் பிரமோஷனுக்காக கமல் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் ஆரம்பத்தில் விக்ரம் படம் 3 மணி நேரத்தை தாண்டி ரன்னிங் டைம் உள்ளதாக கூறப்பட்டது.

வலிமை படத்திலும் ஹெச் வினோத் 3 மணி நேரம் தாண்டி எடுத்துச் சென்றதால் ரசிகர்களுக்கு ஒரு அலுப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் பற்றி லோகேஷ் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதாவது விக்ரம் படம் மொத்தமாக 2 மணி நேரம் 53 நிமிடங்கள் மட்டுமேதானம்.

மேலும் ஆரம்பத்தில் டைட்டில், சென்சார் ஆகியவை ஐந்து நிமிடம் போக மீதமுள்ள 2 மணிநேரம் 48 நிமிடம் தான் விக்ரம் படத்தின் முழு காட்சிகளும் ஒளிபரப்பாக உள்ளது. கைதி படத்தை போல விக்ரம் படத்திலும் பாடல்கள் இல்லையாம்.

மேலும் விக்ரம் படத்தின் இரண்டாம் பாதி 1.22 நிமிடங்கள் ஒளிபரப்பாக உள்ளது. அதில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். சமீப காலமாக வெளியான படங்களில் இந்த அளவுக்கு எந்த படத்திலும் ஆக்சன் காட்சிகள் இல்லை என லோகேஷ் கூறியுள்ளார்.

அந்தளவுக்கு விக்ரம் படத்தில் கமல் முழு எனர்ஜியுடன் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் விக்ரம் படம் ஒரு எமோஷனல் கலந்த ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்திற்காக கமல் ரசிகர்களை தாண்டி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Trending News