நம்ப ஹீரோக்களை ஏமாற்றும் லோகேஷ் கனகராஜ்.. திடீரென அக்கட தேசத்துக்கு தாவுவதால் வரும் பிரச்சனை

Director Lokesh: அனைத்து முன்னணி நடிகர்களும் தவமிருக்கும் தற்போதைய இயக்குனர் யார் என்றால் அது லோகேஷ் தான். இவருடைய கதையில் நடிக்க வேண்டும் என்பதற்காக பலரும் ஏக்கத்துடன் இருக்கிறார்கள். அந்த வகையில் ரஜினி உட்பட இவரை கூப்பிட்டு எனக்காக ஒரு கதையை ரெடி பண்ணுங்க என்று கேட்டிருக்கிறார்.

அந்த அளவிற்கு வெற்றி இயக்குனராக அனைவரது மனதிலும் குடிப்புகுந்து விட்டார். அப்படிப்பட்ட இவரை சில வருடங்களாக தெலுங்கில் படத்தை இயக்குவதற்கு பலரும் கூப்பிட்டு வருகிறார்கள். அதற்கு லோகேஷும் சம்மதம் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது அக்கட தேசத்திற்கு செல்ல இருக்கிறார்.

Also read: 500 கோடி வசூல் செய்த 5 இயக்குனர்கள்.. நெல்சன் சம்பவத்தால் கடும் நெருக்கடியில் சிக்கிய லோகேஷ்

முக்கியமாக இவருடைய கதையில் நடித்தாக வேண்டும் என்று மும்மரமாக காத்துக் கொண்டிருப்பது தெலுங்கு நடிகர் பிரபாஸ். மேலும் சூர்யாவை வைத்து இரும்புக் கை மாயாவி என்ற படத்தை எடுப்பதற்கு முடிவு எடுத்திருக்கிறார். ஆனால் தற்போது சூர்யா பிசியாக கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் இந்த ப்ராஜெக்ட் இன்னும் உறுதியாகாமல் இருக்கிறது.

ஒருவேளை இந்த படத்தில் சூர்யா நடிக்க முடியவில்லை என்றால் இவருக்கு பதிலாக விக்ரம், சிம்பு இன்னும் வேறு யாராவது ஹீரோகளுக்கு சான்ஸ் கொடுத்து இருக்கலாம். அதை விட்டுட்டு தெலுங்கு ஹீரோவை வைத்து எடுக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார் லோகேஷ். இந்த சமயத்தில் தான் ராஜமவுளியை பாராட்ட வேண்டிய விஷயமாக இருக்கிறது.

Also read: விக்ரம் படத்தை மனதில் வைத்து விஜய் சேதுபதி கொடுக்கும் டார்ச்சர்.. உச்சகட்ட தலைவலியில் லோகேஷ்

அதாவது என்னதான் பிரம்மாண்டமாக படங்களை எடுத்து நமக்கு பிடித்திருந்தாலும், இவர் எப்பொழுதும் தெலுங்கு ஹீரோக்களை மட்டுமே வைத்து படத்தை எடுத்து வருகிறார். தமிழில் உள்ள பெரிய ஹீரோக்களை வில்லன் கதாபாத்திரத்துக்கு மட்டுமே யூஸ் பண்ணிக்கிடுவார். அப்படி இருக்கும் பொழுது லோகேஷ் மட்டும் ஏன் தெலுங்கு நடிகர்களை நம்பி போகிறார் என்பது தெரியவில்லை.

இந்த விஷயத்தில் ஏன் இந்த மாதிரி நம் இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பது புரியவே மாட்டேங்குது. அந்த வகையில் ஏற்கனவே தெலுங்கு நடிகர்களை வைத்து
சங்கர், ஏ ஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது லோகேஷும் இணையப் போகிறார் என்பது கொஞ்சம் வருத்தத்தை கொடுக்கிறது.

Also read: லோகேஷ் பட வில்லனா செத்திடுவாங்கன்னு தெரிஞ்சு, நடிக்க ஆசைப்படும் 4 ஹீரோக்கள்.. ஆசை யாரை விட்டுச்சு!