செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விக்ரம் படத்தில் சூர்யா நல்லவரா, கெட்டவரா.. விளக்கமாக கூறிய லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படத்தில் கமலை மிகவும் மாசாக காட்டியிருப்பதில் ஆண்டவரின் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.

அதேபோன்று படத்தின் கடைசி சில நிமிடங்களில் வந்து மிரட்டி இருக்கும் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரமும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. பல திரைப்படங்களில் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் ஹீரோவாக நடித்து வந்த சூர்யா இதில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வில்லத்தனத்தில் கலக்கியிருக்கிறார்.

அவருடைய இந்தக் கதாபாத்திரம் அடுத்த பாகத்திலும் தொடரும் என்று சில நாட்களுக்கு முன்பு கமல் தெரிவித்திருந்தார். அந்தவகையில் சூர்யா அடுத்த பாகத்தில் போதைப்பொருள் கும்பலை பிடிக்கும் ஒரு நல்ல அதிகாரியாக நடிப்பார் என்று ஒரு ஒரு தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேட்ட பொழுது அதற்கு அவர் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது இந்தப் படத்தில் நான் சூர்யா சாரின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முழுக்க முழுக்க கெட்டவனாக மட்டும்தான் காட்டி இருக்கிறேன்.

நீங்களெல்லாம் கூறுவதைப் போன்று கடைசி நேரத்தில் அவரை நல்லவர் போல் காட்ட மாட்டேன். கண்டிப்பாக விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ஒரு முழு வில்லனாக மட்டும் தான் இருப்பார் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் ரசிகர்களின் பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்துள்ளது.

அந்த வகையில் சூர்யாவின் முழு வில்லத்தனத்தையும் அடுத்த பாகத்தில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் இப்போது நடித்திருப்பதை விட அவர் இன்னும் கொடூர வில்லத்தனத்தை காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News