திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வங்கி வேலையை விட இதுதான் காரணமாம்.. வித்தியாசமாக மனுஷன் என நிரூபித்த லோகேஷ்

Director Lokesh: லோகேஷ் கனகராஜ் எல்லாத்தையும் வித்தியாசம் காட்டி வருகிறார். அவருடைய படங்கள் தொடங்கி ஒவ்வொரு செய்கையுமே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. மேலும் லியோ படம் தொடங்குவதற்கு முன்பே அக்டோபர் 19 ரிலீஸ் என்று அறிவித்தார். அதன்படி தற்போது படப்பிடிப்பையும் முடித்து விட்டார்.

இந்நிலையில் இப்போது பல்வேறு ஊடகங்களுக்கு லோகேஷ் பேட்டி கொடுத்த வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு லோகேஷ் வங்கியில் வேலை பார்த்து வந்தார். அதாவது ஆரம்பத்தில் இந்த வங்கி வேலைக்காக இன்டர்வியூக்கு செல்லும் போது அங்கு ஆயிரம் கணக்கானோர் வந்திருந்தார்களாம்.

Also Read : சிங்கமும், சிறுத்தையும் ஒரே படத்திலா?. 10 படத்துக்குள்ள மொத்த ஹீரோவும் லாக் செய்யும் லோகேஷ்

அவர்களைப் பார்க்கும்போது தனக்கு இந்த வேலை கிடைக்காது என்றுதான் மனதில் நினைத்துள்ளார். ஆனால் உள்ளே சினிமாவை பற்றி கேள்வி கேட்டார்களாம். அதாவது இப்போது உள்ள இளைஞர்களுக்கு சினிமா தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி தான் லோகேஷ் இடம் கேட்கப்பட்டிருக்கிறது.

சினிமாவில் ஊறிப்போன லோகேஷுக்கு சொல்லவா வேண்டும் எல்லோரும் அசரம்படியான ஒரு பதிலை கூறி விட்டாராம். அப்போதும் சினிமாவால் தான் வங்கி வேலை லோகேஷுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் வங்கி வேலைக்கு என்று சில வரைமுறையை வைத்திருக்கிறார்கள். அதாவது மேல் சட்டையின் பட்டனை போட வேண்டும்.

Also Read : அடுத்த ஹீரோவை உறுதி செய்த லோகேஷ்.. பிரம்மாண்ட தயாரிப்பாளர் கூட்டணியில் வெளிவர உள்ள அப்டேட்

அதோடு மட்டுமல்லாமல் தாடியுடன் இருக்கக் கூடாது. இதெல்லாம் லோகேஷுக்கு சுத்தமாக செட் ஆகாத காரணத்தினால் லட்சத்தில் சம்பளம் கிடைத்தாலும் வேண்டாம் என்று வங்கி வேலையை தூக்கி எறிந்து விட்டு வந்ததாக கூறி இருக்கிறார். ஆனாலும் தனக்கு பிடித்த துறையான சினிமாவை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக கொண்டு செல்கிறார்.

இன்னும் பல வருடங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக லோகேஷ் படங்கள் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனாலும் இன்னும் பத்து வருடங்கள் மட்டும் சினிமாவில் இருந்து விட்டு தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டு இதிலிருந்து கிளம்பி விட வேண்டும் என்பதுதான் லோகேஷின் எண்ணமாக இருக்கிறது.

Also Read : கமலை பார்த்து சினிமாவில் சாதித்த 6 இயக்குனர்கள்.. பாலிவுட்டை மிரள விடும் லியோ லோகேஷ்

Trending News