வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலிவுட் கான் நடிகரை இயக்கப்போகும் லோகேஷ்.. தீயாக பரவிய போஸ்டரால் பரபரப்பான கோலிவுட்

அண்மையில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சக்கை போடு போட்டது. அடுத்த வருடம் ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுக்க இத்திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து ஷாருக்கான் டைகர் 3 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே டைகர் திரைப்படத்தின் 2 பாகங்கள் வெளியாகி சக்கையை போட்ட நிலையில், கத்ரினா கைப் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹிந்தியில் பிரபல கான் நடிகருடன் இணைந்து திரைப்படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் தீயாய் பரவி வருகிறது.

Also Read : ரகசியமாய் காய் நகர்த்தும் லோகேஷ் கனகராஜ்.. விஜய்க்கே தெரியாமல் செய்யும் தில்லாலங்கடி வேலை

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட மாஸ் ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் விஜயின் நடிப்பில் தளபதி -67 திரைப்படத்தை இயக்க உள்ளார். இதனிடையே சமீபத்தில் ஒரு போஸ்டர் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளது. அந்த போஸ்டரில் பெரிய துப்பாக்கியுடன் மெகாஸ்டார் சல்மான் கான் #90 என்ற ஹேஷ்டாக் இடம்பெற்றுள்ளது.

மேலும் 2024 ரமலான் ரிலீஸ் என்றும், லோகேஷ் கனகராஜ் பிலிம் என்ற வாசகத்துடன் அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இது புரளியாக கூட இருக்கலாம் என கூறி வருகின்றனர்.ஏனென்றால் அண்மைக்காலமாக பேன் மேட் போஸ்டர் என சமூக வலைத்தளங்களில் நடிகர்களின் ரசிகர்கள் அவர்களாகவே போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

Also Read : 3 இடங்களை குறி வைக்கும் லோகேஷ் கனகராஜ்.. தளபதி 67 க்கு இப்போவே போடும் ஸ்கெட்ச்

இதனிடையே இந்த போஸ்டர், பேன் மேட் போஸ்டர் என உறுதியாகியுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தை தொடர்ந்து கைதி 2, விக்ரம் 3 உள்ளிட்ட அடுத்தடுத்த திரைப்படங்களை தமிழில் இயக்க ஆயத்தமாகியுள்ளார். இந்த திரைப்படங்களை முடிக்கவே குறைந்தது 2 வருடங்கள் ஆகும்.

sk90-lokesh
sk90-lokesh

இந்த நிலையில் சல்மான் கானுடன் இணைந்து ஹிந்தியில் படம் இயக்குவது சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் ஹிந்தியில் அறிமுகம் ஆனால் கட்டாயம் அங்கும் ஒரு காங்ஸ்டர் திரைப்படத்தை இயக்குவார் என்பதில் சந்தேகமே இல்லை. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ரோலெக்ஸ்க்கு ரெடியான மாஸ் ஸ்டோரி.. அதிரடி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

Trending News