திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோ கிளைமாக்ஸ்ஸில் அதிரடியான சஸ்பென்ஸ் வைக்கும் லோகேஷ்.. 1000 கோடி வசூலை பார்க்காமல் விடமாட்டேன்

Leo Part 2: தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்திற்கான மீதமுள்ள பேட்ச் ஒர்க் வேலைகள் தற்போது காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இதில் விஜய் தவிர மொத்த பட குழுவும் பங்கேற்று இருக்கிறது. பேட்ச் ஒர்க் வேலைகள் மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சம்பந்தப்பட்ட ஒரு சில காட்சிகளும் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.

விஜய் ரசிகர்கள் தற்போது லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அப்டேட்க்காக தவமாய் தவம் கிடக்கின்றனர். ஏற்கனவே சஞ்சய் பிறந்த நாளின் போது அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பட குழு மீம்ஸ் வீடியோ வெளியிட்டு இருந்தது இன்னிலையில் ஆக்சன் கிங் அர்ஜுனின் பிறந்தநாள் அன்று அதே போன்று ஒரு வீடியோ வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

Also Read:கமலுக்கு செய்யாத பிரம்மாண்டத்தை விஜய்க்கு செய்யும் லோகேஷ்.. கோவைக்கு படையெடுக்க போகும் தளபதி வெறியர்கள்

இந்த நிலையில் நேற்றிலிருந்து லியோ படத்துக்கு இரண்டாவது பார்ட் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. வழக்கம் போல விக்ரம்2, கைதி டு போல் லியோ படத்தின் இரண்டாவது பாகத்தை பற்றி பேசுகிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இப்போது அந்த படத்தை உறுதிப்படுத்தும் விதமாக சில அப்டேட்டுகள் கசிந்துள்ளது.

வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படத்தின் கிளைமாக்ஸ்ஸில் பார்ட் 2 விற்கான டீசர் ஒளிபரப்பப்படும் என தெரிகிறது. மேலும் லியோவின் இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU கான்செப்டில் எடுக்கப் போகிறாராம். மேலும் இந்த படத்தை தயாரிக்க இருப்பது உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான்.

Also Read:விஜய், கமலை காலி செய்ய போகும் 4 நாள் வசூல்.. வெறியோடு களத்தில் குதித்த ஜெயிலர்

தளபதி விஜய் லியோ படம் முடிந்த பிறகு இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பின்னர் ஜில்லா பட இயக்குனருடன் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறாராம். அதே நேரத்தில் கமலஹாசன் கல்கி மற்றும் தன்னுடைய 234ஆவது படத்தை முடித்துவிட்டு இந்த படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படம் மற்றும் கைதி 2 படத்தை இயக்கி முடித்துவிட்டு இந்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட இருக்கிறார். மொத்தத்தில் விஜய், கார்த்தி, கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU கான்செப்டில் படம் எடுக்க இருக்கிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. அவருடைய மொத்த திட்டமும் ஆயிரம் கோடி வசூலை நோக்கி இருக்கிறது.

Also Read:விஜய் முடிவால் அட்லீக்கு வந்த பெரிய வாய்ப்பு.. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள போகும் லோகேஷ்

Trending News