புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கர்லிங் ஹேர், முறுக்கு மீசை என ஆளே மாறிய லோகேஷ் கனகராஜ்.. பேசாம ஹீரோவாக நடிக்கலாம்!

தமிழ் சினிமாவே தற்போது இளம் இயக்குநர்களை நம்பித்தான் இருக்கிறது என்பது சமீபத்திய வெற்றிப் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் பல வெற்றிப்படங்களை இளம் இயக்குனர்கள் தான் கொடுத்துள்ளனர்.

தளபதி விஜய்க்கு ஒரு பக்கம் அட்லீ என்றால் தல அஜித்துக்கு இன்னொரு பக்கம் வினோத். தற்போது அட்லீக்கு பிறகு தளபதி விஜய்யின் ஃபேவரட் இயக்குனராக மாறி விட்டாராம் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் படங்களில் தொடர்ந்து நடிக்க விருப்பமாக இருக்கிறாராம் தளபதி விஜய்.

இதற்காக சமீபத்தில் கூட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய குருநாதர் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் கண்டிப்பாக தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க மாஸ்டர் படத்தின் வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி விட்டாராம் லோகேஷ் கனகராஜ். முன்னதாக மாஸ்டர் படத்திற்கு 6 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தற்போது தன்னுடைய சம்பளத்தை 15 கோடிகளாக அதிரடியாக உயர்த்தி விட்டதாகவும் கூறுகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் எப்போதுமே நடிகர்களை விட அதிகமாக கெட்டப்புகளை மாற்றுவார். ஒவ்வொரு படம் இயக்கும் போதும் ஒவ்வொரு கெட்டப்புகளில் பணியாற்றுவார்.

அந்த வகையில் கர்லிங் ஹேர், முறுக்கு மீசை என வைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விக்ரம் படத்தில் சண்டை பயிற்சியாளராக அன்பறிவு ஆகியோர் பணியாற்றவுள்ளனர்.

lokesh-kanagaraj-cinemapettai
lokesh-kanagaraj-cinemapettai

Trending News