ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரோஸ் பவுடர், லிப்ஸ்டிக், என்ன லோகேஷ் ஆளே மாறிட்டேள்! ஃபுல் மேக்கப்பில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளவர்தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கமல்ஹாசனுடன் விக்ரம், விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என லோகேஷ் கனகராஜ் மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம்.

சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் அனைவரும் இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதால் இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர்கள் கூட தற்போது ஸ்டார் இயக்குனர் ரேஞ்சுக்கு வளர்ந்து விட்டனர்.

அஜித்துக்கு வினோத் என்றால், விஜய்க்கு லோகேஷ் கனகராஜ். விரைவில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு விழாவுக்கு சென்றுள்ளார். அப்போது வழக்கத்திற்கு மாறாக முகம் முழுவதும் மேக்கப் போட்டுக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

lokeshkanagaraj-cinemapettai
lokeshkanagaraj-cinemapettai

ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றால் கண்டிப்பாக பிரபலங்களுக்கு மேக்கப் போட்டு அனுப்பி விடுவார்கள். அதை க்ளோசப்பில் பார்க்காத வரை நமக்கு நல்லது. இது தெரியாமல் லோகேஷ் கனகராஜ் ஒரு குழந்தைக்கு செல்பி போஸ் கொடுக்கிறேன் என தன்னுடைய மேக்கப் சீக்ரெட்டை வெளியிட்டுவிட்டார்.

Trending News