Lokesh Kanagaraj: ஒரு இயக்குனர் ஹிட் படம் கொடுத்துவிட்டால் உடனே ஒரு டாப் ஹீரோ அவரை வளைத்து போட்டு சோலி முடிப்பது என்பது தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடப்பது உண்டு.
அப்படிப்பட்ட வலையில் சிக்கியவர் தான் லோகேஷ் கனகராஜ். டாப் ஹீரோக்களின் மாஸ், கிளாஸ் எல்லாம் லோகிக்கு செட்டாகாது என்பதுதான் உங்களுடைய ரசிகர்களின் கருத்து.
பட்டு புத்தி தெளிந்து ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
கூடு விட்டு கூடு பாயும் ரோலெக்ஸ்-டில்லி
மீண்டும் தன்னுடைய LCU பயணத்தை தொடங்க இருக்கிறார். சமீபத்தில் தான் கைதி 2 உருவாக இருப்பதை கார்த்தி உறுதி செய்திருந்தார்.
இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. அதேபோன்று ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ரோலக்ஸ் கேரக்டரை வைத்து முழு நீள படத்தையும் எடுக்க இருக்கிறார்.
இந்த படத்தை KVN புரொடக்ஷன் தயாரிக்கிறது. மேலும் கைதி படத்தில் ரோலக்ஸ் வருவது போலவும், ரோலக்ஸ் படத்தில் டில்லி வருவது போலவும் இந்த கதை தயாராகிக் கொண்டிருக்கிறது.