தமிழ் சினிமாவே தற்போது இளம் இயக்குநர்களை நம்பித்தான் இருக்கிறது என்பது சமீபத்திய வெற்றிப் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் பல வெற்றிப்படங்களை இளம் இயக்குனர்கள் தான் கொடுத்துள்ளனர்.
தளபதி விஜய்க்கு ஒரு பக்கம் அட்லீ என்றால் தல அஜித்துக்கு இன்னொரு பக்கம் வினோத். தற்போது அட்லீக்கு பிறகு தளபதி விஜய்யின் ஃபேவரட் இயக்குனராக மாறி விட்டாராம் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் படங்களில் தொடர்ந்து நடிக்க விருப்பமாக இருக்கிறாராம் தளபதி விஜய்.
இதற்காக சமீபத்தில் கூட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய குருநாதர் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் கண்டிப்பாக தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க மாஸ்டர் படத்தின் வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி விட்டாராம் லோகேஷ் கனகராஜ். முன்னதாக மாஸ்டர் படத்திற்கு 6 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தற்போது தன்னுடைய சம்பளத்தை 15 கோடிகளாக அதிரடியாக உயர்த்தி விட்டதாகவும் கூறுகின்றனர்.
கேட்டால் தனக்குப் பின்னால் வந்தவர்கள் 10 கோடி சம்பளம் வாங்கும் போது நான் மட்டும் என்ன குறைச்சலா என்கிறாராம். லோகேஷ் கனகராஜ் இப்படி பேசியிருக்க வாய்ப்பில்லையாம், இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் மீதுள்ள பொறாமையால் கோலிவுட் வட்டாரங்களில் அவரைப்பற்றிய சின்னச் சின்ன விஷயங்களையும் ஊதி பெரிதாக்கும் வேலை நடைபெற்று வருகிறதாம்.
அதற்கெல்லாம் அசராமல் தற்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு செம வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் விரைவில் தெலுங்கு மெகா ஸ்டார் ராம்சரணுடன் இணைந்து விரைவில் ஒரு படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.