வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ராம் சரணும் இல்லை, பிரபாஸும் இல்லை.. லோகேஷ் கனகராஜின் அடுத்த தெலுங்கு பட நடிகர் இவர்தான்! செம மாஸ்!

லோகேஷ் கனகராஜ்(lokesh kanagaraj) தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்கிற அளவுக்கு தன்னுடைய முதல் மூன்று படங்களின் மூலம் நிரூபித்துள்ளார். இதுவரை அவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன.

தற்போது லோகேஷ் கனகராஜுக்கு தமிழை விட தெலுங்கு சினிமாவில் இருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஊரடங்கு சமயத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அந்த நிறுவனத்திற்காக லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட நாயகனாக வலம் வரும் பிரபாஸை வைத்து படம் இயக்க போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்து திரும்பும் இடமெல்லாம் வைரல் ஆனது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்படி லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம்.

mahesh-babu-cinemapettai
mahesh-babu-cinemapettai

முன்னதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜுக்கு அட்வான்ஸ் கொடுத்த நிலையில் தற்போது மகேஷ்பாபு அந்த படத்தை வேறு ஒரு நிறுவனத்துடன் செய்ய ஆசைப்படுகிறாராம். இதற்கு மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அனுமதி கொடுக்குமா என்பது சந்தேகம் தானாம்.

தமிழ்நாட்டில் சன் பிக்சர்ஸ் எப்படியோ அப்படித்தான் தெலுங்கில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இதன் காரணமாக பெரிய அளவில் முன்னணி நடிகர்களை அந்த நிறுவனம் பகைத்துக் கொள்ளாது என்கிறார்கள் பிரதேச வாசிகள். ஆக மொத்தத்தில் லோகேஷ் கனகராஜ் இன்னும் சில வருடங்களில் இந்திய சினிமாவே கொண்டாடும் இயக்குனராக மாறி விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முதலில் கமலுடன் விக்ரம் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விஜய்யுடன் தளபதி 66 படத்தை இயக்க உள்ளாராம் லோகேஷ் கனகராஜ். இந்த இரண்டு படங்களும் முடிந்தால்தான் மகேஷ்பாபுவின் படத்திற்கான அறிவிப்புகள் வரும் என்கிறார்கள் வலைப்பேச்சு நண்பர்கள்.

கலக்குங்க ப்ரோ!

Trending News