வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

5 ஜாம்பவான்களை அடுத்தடுத்து இயக்கத் தயாராகும் லோகேஷ்.. பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டாரின் கடைசி படம்

Lokesh Kanagaraj Upcoming Movie Actors: கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கினாலும் தொடர் வெற்றிகளை கொடுத்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இப்போது டாப் நடிகர்களின் முதல் சாய்ஸ். இவர் மாஸ்டர் படத்திற்குப் பிறகு 2-வது முறையாக லியோ படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்து ப்ரமோஷன் வேலையை துவங்கப் போகின்றனர். இந்த சூழலில் லோகேஷ் அடுத்தடுத்த படங்களில் டாப் 5 நடிகர்களை இயக்கப் போகிறார்.

ரஜினி: லோகேஷ் ரஜினியின் 171-வது படத்தை கைப்பற்றி இருக்கிறார். இப்போது சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படத்தை முடித்த கையோடு டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் 170-வது படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படம் ஒரு சில மாதங்களில் நிறைவடைந்து அடுத்ததாக லோகேஷ்- ரஜினி கூட்டணியில் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு வெகுசீக்கிரமே துவங்கப் போகிறது.

இந்தப் படம் தான் ரஜினியின் கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது. ஆகையால் இதில் சூப்பர் ஸ்டார் மாஸ் ஹீரோவாக ரவுண்டு கட்டப் போகிறார். இதில் ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக எடுக்க வேண்டும் என லியோ படத்திற்கு பிறகு முழு வீச்சில் இறங்க திட்டமிட்டுள்ளர்.

Also Read: லோகேஷ் இடம் இந்த ஸ்டைல் வியப்பா இருந்துச்சு.. விஜய்யின் அப்பா கூறிய சீக்ரெட்

பிரபாஸ் : லோகேஷ் டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று பிரபாஸிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கி வைத்திருக்கிறார். சமீப காலமாகவே பிரபாஸின் படங்கள் எல்லாம் அவருக்கு படு தோல்வியை தந்து கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன் வந்த ஆதிபுருஷ் படத்திற்கும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால், எப்படியாவது தன்னுடைய மார்க்கெட்டை தூக்கி நிறுத்த வேண்டும் என லோகேஷ் உடன் பிரபாஸ் கைகோர்த்திருக்கிறார். இந்த படத்தை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்: நடிப்பிலும் தயாரிப்பிலும் தற்போது பிஸியாக இருக்கும் உலகநாயகன் கமலஹாசனுக்கு மாபெரும் ஹிட் கொடுத்த படம் விக்ரம். இந்த படத்தில் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை லோகேஷ் பரபரப்பாக பார்த்து வருகிறார். விரைவில் இந்தப் படத்திற்கான அறிவிப்பும் வெளியாகும். 

Also Read: லியோ படத்தில் புதிதாய் கிடைத்த நான்கு அப்டேட்.. எப்படி கசிந்தது என சிபிஐ போல வலை வீசும் லோகேஷ்

சூர்யா: விக்ரம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், அந்த ரோலக்ஸ் கேரக்டரை மட்டுமே வைத்து சூர்யா நடிப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற திட்டத்திலும் லோகேஷ் இருக்கிறார். இதற்கு சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

கார்த்தி: லோகேஷின் எல்யூசி-இல் இடம்பெற்ற விக்ரம் படத்திற்கு முன்னோடியான கைதி படத்தின் 2ம் பாகத்தையும் எடுக்கும் ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதல் பாகத்தை போலவே 2ம் பாகத்திலும் கார்த்தி தான் கதாநாயகனாக நடிக்கப் போகிறார்.

Also Read: விஜய்யை ஆட்டி படைக்கும் அந்த பெரும்புள்ளி.. தலையாட்டி பொம்மை போல் சொன்னதைச் செய்யும் தளபதி

இவ்வாறு அடுத்தடுத்து 5 டாப் நடிகர்களின் ப்ராஜெக்டை கையில் வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இன்னும் மூன்று வருடத்திற்கு செம பிஸி மேன். அதிலும் ரஜினியின் கடைசி படமான தலைவர் 171 வது படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அளவு கடந்து காணப்படுகிறது.

Trending News