புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மாஸ்டர் படம் ஹாலிவுட் படத்தின் காப்பியா.? உண்மையை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்!

கோலிவுட்டில் ‘மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படம் லோகேஷ்க்கு வெற்றிப்படமாக அமைந்ததோடு, அவரது புகழை தமிழகம் முழுவதும் பரப்பியது. மேலும்  கைதி படத்தில் பெற்ற மாபெரும் வெற்றியின் காரணமாக லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக  தளபதி விஜயுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.

அதோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரோனா காரணமாக இன்று வரை ரிலீசாகாமல் உள்ளது. ஏனென்றால் கொரோனா பெரும் தொற்றின் காரணமாக ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த இந்தப் படம், வருகின்ற ஜனவரி 13-ஆம் தேதி திரையிடப்பட உள்ளது.

இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தை பற்றி இணையத்தில் எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்தத் படத்தைப் பற்றி ‘இது ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி’ என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

மேலும் இதுபற்றி லோகேஷ் கனகராஜ் கூறுகையில், மாஸ்டர் திரைப்படம் எந்த ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி கிடையாது என்றும், இந்த படம் தான் நேரில் சந்தித்த ஒருவரின் இன்ஸ்பிரேஷன் கதை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டர் திரைப்படம் முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவாக்கப்பட்ட கதை’ என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். இதன்மூலம் மாஸ்டர் திரைப்படத்தை பற்றி எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லோகேஷ்.

இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, தளபதி ரசிகர்களாலும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களாலும் பெருமளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Trending News