சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

லோகேஷ் கனகராஜ் இப்படிப்பட்டவரா!. இதுக்குதாம்பா சூப்பர் ஸ்டாரே வாய்ப்பு கொடுத்துருக்காரு

Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு குறுகிய காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் சென்சேஷனல் படைப்பாளியாக உருவெடுத்தவர். ஒரு இயக்குனரை ரசிகர்கள் கொண்டாடுவது பெரிய விஷயம். அப்படி இருக்கும் பட்சத்தில் லோகேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

கார்த்தி மற்றும் விஜய் என அடுத்தடுத்த டாப் ஹீரோக்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு கமலஹாசனை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் ஏகத்தில் படம் பண்ண இருக்கிறார் லோகேஷன் இந்த அபரிவிதமான வளர்ச்சிக்கு அவருடைய ஒரு சில பண்புகளும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர்கள் என்றாலே அவர்களுக்கு மரியாதை கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும் என சொல்லப்பட்ட காலங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால் லோகேஷ் கனகராஜ் அவருடைய உதவி இயக்குனர்களை நடத்தும் விதம் எல்லாராலும் பாராட்டப்படுகிறது. அந்த அளவுக்கு தன்னுடன் இருப்பவர்களை அவர் பார்த்துக் கொள்கிறார்.

Also Read:விஜய்யை மிஞ்ச ரஜினி நடிக்கப் போகும் 5 பிரம்மாண்ட இயக்குனர்கள்.. பட்ஜெட் 1500 கோடி, அப்படின்னா வசூல்?

லோகேஷ் கனகராஜ் சூட்டிங் ஸ்பாட்டில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தன்னுடைய உதவி இயக்குனர்களை நேரத்திற்கு சாப்பிட அனுப்பி விடுவாராம். அவர் சாப்பிடாமல் இருந்தால் கூட பரவாயில்லை அவர்கள் சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பாராம் அதேபோன்று சாப்பாடு ரெடியாகவில்லை என்றாலும் அவரே வாங்கி கொடுத்து விடுவாராம்.

அதேபோன்று லோகேஷ் கனகராஜ் எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் யார் முன்னிலையிலும் அவருடைய உதவி இயக்குனர்களை திட்ட மாட்டாராம். ரூமுக்கு வந்தவுடன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி பொறுமையாக தான் அறிவுரை செல்வாராம். மேலும் தன்னை பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறாராம்.

லோகேஷ் தன்னுடைய உதவி இயக்குனர்களின் பாதுகாப்பை எப்போதுமே உறுதிப்படுத்திக் கொண்டே தான் இருப்பாராம். அவருடன் இருப்பவர்களை எந்த கஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். அதனால் தான் அவருடைய உதவி இயக்குனர்கள் அவருக்கு உண்மையாக உழைக்கிறார்கள். லோகேஷின் மிகப்பெரிய வெற்றிக்கு இதுதான் அடித்தளம்.

Also Read:பேரனாலும் சிக்கலை சந்தித்த ரஜினி.. இந்த வயசிலேயே அலும்பு பண்ணிய தனுஷின் வாரிசு

 

 

 

 

 

Trending News