ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

லியோ விமர்சனத்தால் படு பயங்கரமாக செயல்படும் லோகேஷ்.. வரிசை கட்டி நிற்கும் 6 படங்கள்

Director Lokesh : லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வந்த நிலையில் லியோ படத்தில் சருக்களை சந்தித்தார். இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. மேலும் நெகட்டிவ் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட லோகேஷ் அதன் பிறகு தரமான படங்களை கொடுக்க படு பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்னும் பத்து வருடம் மட்டுமே சினிமாவில் படம் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன லோகேஷ் கைவசம் தற்போது ஆறு படங்கள் இருக்கிறது. கார்த்தி, லோகேஷ் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இப்போது கார்த்தி இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தமாக உள்ள நிலையில் அடுத்ததாக கைதி 2வில் நடிக்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து கமல் மற்றும் பல நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளியாகி இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது விக்ரம் படம். இப்போது விரைவில் விக்ரம் 2 படமும் உருவாக இருக்கிறது. அதோடு விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க இருக்கிறார்கள்.

Also Read : போதையை கருவாக வைத்து வெளிவந்த பிரபலமான 5 படம்.. சங்கடத்தில் தவித்து வரும் லோகேஷ்

இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் சூர்யாவின் இரும்பு கை மாயாவி படத்தை முன்பே லோகேஷ் எடுப்பதாக இருந்தது. சில காரணங்களால் அந்த படம் தடைபட்ட நிலையில் இப்போது அந்தப் படமும் தொடங்க இருக்கிறது.

லோகேஷ் மற்றும் ரஜினி முதல் முறையாக தலைவர் 171 படத்தில் கூட்டணி போட இருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கான வேலையில் தான் இப்போது லோகேஷ் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆகையால் லோகேஷின் லயன் அப்பில் இப்போது ஆறு படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

Also Read : இரும்பு கை மாயாவி படத்தின் அப்டேட்டை கொடுத்த லோகேஷ்.. ரஜினிக்கு அடுத்து சம்பவம் செய்ய போகும் சூர்யா

Trending News