செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தன்னடக்கம், தைரியம், பதட்டம் இல்லை, வந்து பாருங்கள்.. மேடையிலேயே 4 அப்டேட்டையும் போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவை கொண்டாடும் இயக்குனராக மாறி உள்ளார். கடைசியாக அவரது இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. லோகேஷ் கனகராஜின் எல்லா செயல்பாடுகளும் வித்தியாசமாக உள்ளது. அது ரசிகர்களுக்கும் பிடித்து போனது.

மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர்கள், நடிகர்கள் பேசும் போது கொஞ்சம் பதட்டத்துடன் காணப்படுவார்கள். ஏனென்றால் பத்திரிக்கையாளர்களின் கிடக்குப்படியான கேள்விக்கு அசராமல் பதில் கூறி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அவர்கள் எந்த கேள்வி கேட்டாலும் சலிக்காமல் பதில் சொல்லி வருகிறார்.

Also Read : முதல் பாதி டப்பிங்கில் அரண்டு போய் விட்டேன்.. விக்ரம் படத்தில் மறக்கமுடியாத அனுபவத்தை ஷேர் செய்த லோகேஷ்

இந்நிலையில் பெரிய ஹீரோக்கள் முதல் இயக்குனர்கள் வரை தங்கள் ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டால் அடுத்த படத்தை பற்றி பேச மாட்டார்கள். அந்த படம் முடிந்த பிறகு தான் அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுப்பார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தடுத்த படங்களை கூறி உள்ளார்.

அதாவது மாஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் உடன் இணைந்த தளபதி 67 படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் இப்படம் டைட்டில் வீடியோ வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி 2 படம் உருவாக உள்ளது.

Also Read : தேடிப் போய் வாய்ப்பு கொடுத்த லோகேஷ்.. விஜய்யுடன் ஒரு சம்பவம் இருக்கு, சஸ்பென்சை உடைத்த விஷால்

மேலும் விக்ரம் 2 படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் வந்த சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முழு படமாக வைத்து லோகேஷ் இயக்க உள்ளாராம்.

இவ்வாறு பத்திரிக்கையாளர் சந்திப்பில் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் எதற்கும் பயப்படாமல் தன்னுடைய அடுத்தடுத்த படங்களைப் பற்றி ரிலாக்ஸாக லோகேஷ் கூறியிருந்தார். மற்ற இயக்குனர்கள் இதை செய்வார்களா என்பது சந்தேகம் தான்.

Also Read : இந்த இங்கிலீஷ் படத்தின் காபிதான் தளபதி-67 கதையா.? அட்லீ போல சிக்கலில் மாட்டிய லோகேஷ்

Trending News