சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

முரட்டு மீசையுடன் லோகேஷ் கனகராஜின் புதிய லுக்.. டாப் ஹீரோஸுக்கு டஃப் கொடுப்பாரு போல!

கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து LCU படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினி, ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, ஃபகத்பாசில் நடிப்பில், கூலி படத்தை இயக்கி வருகிறார்.

இவர் இயக்குனராக மட்டுமின்றி. அவரது கைதி, மாஸ்டர் படங்களிலேயே நடிகராகவும் மாஸ் லுக்கில் சில நிமிடங்கள் தோன்றினார். அவரது லுக் ரசிகர்களைக் கவர்ந்தது.

அவர் எப்போது முழு படத்தில் ஹீரோவாக நடிப்பார் என கேள்வி எழுந்தது. இதற்குப் பதிலாக, ஸ்ருதிஹாசனுடன் அவர் இணைந்து நடித்த இனிமேல் ஆல்பம் பாடல் கடந்த மார்ச்சில் வெளியானது.

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவா ஹீரோவாக நடிக்கும் புறநானூறு படத்தில் லோகேஷ் கனரகாஜ் வில்லனாக நடிக்க ஒப்பந்தமானார். அதன்பின் கூலி படத்தில் பிஸியாக இருந்ததால், அதில் இருந்து விலகினார்.

ஒருவேளை சிவா ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக அறிமுகமானால், ஹீரோவாக நடிக்க முடியாது என்று கருதி அப்படத்தில் இருந்து விலகினாரா என தெரியவில்லை.

கூலி படத்துக்காக நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோ!

இப்போது முரட்டு மீசையுடன் தன் நண்பர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அடுத்த படத்தில் ஹீரோவாக லோகேஷ் நடித்து வரும் தோற்றமா இது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரஜினி பிறந்த நாளுக்கு கூலி படத்தில் இருந்து சிறப்பு டீசர் வெளியாகும் என கூறப்பட்டது. அதற்கான தயாரிப்புகளில் தனது நண்பர்கள் கபிலன், ஐஸ்வர்யா சுரேஷுடன் லோகேஷ் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanakaraj

Trending News