சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

சூப்பர் ஸ்டாருக்காக குருவை டீலில் விட்ட லோகேஷ்.. யுனிவர்சில் நடக்கும் அதிரடி திருப்பம்

லோகேஷ் இப்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்குவதில் பிஸியாகிவிட்டார். ஆனாலும் அவருடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் லோகேஷ் யுனிவர்சில் ஒரு அதிரடி திருப்பம் நடந்துள்ளது. இது நிச்சயம் யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.

அதாவது கடந்த வருடம் இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது வரலாறையே உருவாக்கியது. உலக அளவில் கொண்டாடப்பட்ட அந்த படத்திற்குப் பிறகு லோகேஷின் இமேஜும் கிடு கிடுவென உயர்ந்தது. அது மட்டுமல்லாமல் அவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு உச்ச நடிகர்களே போட்டி போட்டு வருகின்றனர்.

Also read: ஜெயிலர் படத்தில் வந்த காசை சிவகார்த்திகேயன் என்ன செய்தார் தெரியுமா.? பலரையும் கலங்க வைத்த சம்பவம்

அந்த வகையில் சூப்பர் ஸ்டாரும் லோகேஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி அடுத்ததாக எந்த இயக்குனருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு திரை உலகில் இருந்து வருகிறது. அதில் பல இயக்குனர்களின் பெயர் அடிபட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

இந்த சூழ்நிலையில் ரஜினி திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக தரமான ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதன் காரணமாகவே அவர் லோகேஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இது குறித்து அவர் லோகேஷிடமும் போன் செய்து பேசியிருக்கிறார். இயல்பாகவே சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனர்களின் கனவாக இருக்கிறது.

Also read: கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டியதால் கிடைத்த பலன்.. 8 வருடம் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கும் விஜய் பட ஹீரோயின்

அப்படி இருக்கும் போது தன்னை தேடி வந்த இந்த வாய்ப்பை விட்டுவிட மனம் இல்லாமல் லோகேஷ் தன் குருவிடம் உதவி கேட்டிருக்கிறார். அதாவது அவர் கமலுடைய தீவிர ரசிகன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் விக்ரம் படத்தை அவர் பார்த்து பார்த்து செதுக்கினார். தற்போது அந்த படத்தின் அடுத்த பாகமும் உருவாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ரஜினி பட வாய்ப்பையும் அவர் தவறவிட விரும்பவில்லை.

அதனால் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க அவர் கமலிடம் பேசி வருகிறாராம். தற்போது இது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் கூடிய விரைவில் ரஜினி, லோகேஷ் படத்தின் அறிவிப்பு வர இருக்கிறது. அந்த வகையில் லோகேஷின் யுனிவர்சில் சூப்பர் ஸ்டார் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: பிரபல தயாரிப்பாளரால் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.. டர்னிங் பாயிண்டாக அமைந்த படம்

Trending News