வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வசூல் வேட்டையாட தொடர்ந்து 6 நாட்களை லாக் செய்த லோகேஷ்.. பண்டிகை நாளை குறி வைக்கும் தளபதி 67

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகிறது. ஆனால் படம் வெளி வருவதற்கு முன்பே பல கோடிக்கு பிசினஸ் ஆகி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் இப்படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

இதனாலேயே இப்படம் வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்கும் என்று பட குழு எதிர்பார்த்து வருகிறது. இந்த படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த வருட இறுதியில் பூஜையுடன் ஆரம்பமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடக்க இருக்கிறது.

Also read: பாலிவுட் கான் நடிகரை இயக்கப்போகும் லோகேஷ்.. தீயாக பரவிய போஸ்டரால் பரபரப்பான கோலிவுட்

ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற லோகேஷ், அந்த படத்தை காட்டிலும் தளபதி 67 திரைப்படத்தை வேற லெவலில் கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். அதனாலேயே தற்போது வாரிசு திரைப்படத்தை காட்டிலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

மேலும் இப்படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதையும் அவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. அதாவது அக்டோபர் 19 வியாழக்கிழமை அன்று இப்படத்தை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளது.

Also read: அக்கட தேசத்திலும் டான் ஆன தளபதி.. சிரஞ்சீவி பாலையாவை ஓரம் கட்டிய விஜய்

அதைத்தொடர்ந்து வார இறுதி நாட்கள் என்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் படத்திற்கான கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதே லோகேஷன் திட்டம். அது மட்டுமல்லாமல் அக்டோபர் 23 திங்கட்கிழமை ஆயுத பூஜை பண்டிகை வருகிறது. அதற்கு மறுநாள் விஜயதசமி என்பதால் தொடர்ச்சியாக விடுமுறை தினங்களாக இருக்கிறது. இது பட குழுவிற்கு மேலும் சாதகமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் அக்டோபர் 19ல் ஆரம்பித்து 24ஆம் தேதி வரையில் ஆறு நாட்களும் தியேட்டர்களில் கூட்டம் குறைவில்லாமல் இருக்கும். இதனால் படத்தின் வசூலும் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையும் வர இருப்பது இன்னும் ஒரு கூடுதல் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. இப்படி லோகேஷ் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ரிலீஸ் தேதியை லாக் செய்து இருக்கிறார்.

Also read: விஜய்க்கு பயத்தை காட்டிய அஜித்.. துணிவை தட்டி தூக்க தளபதி எடுத்த பிரம்மாஸ்திரம்

Trending News