ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

18 நொடியில் பலான சேட்டை செய்யும் லோகேஷ்.. குருன்னு சொல்லிட்டு இப்படி பொரட்டி எடுக்கலாமா.?

Lokesh Kanagaraj: அய்யய்யோ நம்ம லோகியா இது. இவருக்கு என்னதான் ஆச்சு. நம்பவே முடியவில்லையே. இது தான் இப்போது ரசிகர்களின் வெளிப்படையான கதறலாக இருக்கிறது.

அந்த அளவுக்கு சரியான ஒரு சம்பவத்துக்கு தயாராகி இருக்கிறார் இந்த ஆக்சன் பாய். எனக்கு ரொமான்ஸ் சுட்டு போட்டாலும் வராதுன்னு சொன்ன லோகி புது அவதாரம் எடுத்துள்ளார்.

அவருடைய குருநாதர் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் உடன் இவர் ஆல்பம் பாடலில் நடித்து முடித்துள்ளார். அந்த பாடல் எப்படி இருக்கும் என்ற முன்னோட்டம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது.

பலான சேட்டை செய்யும் லோகேஷ்

அதை பார்த்து தான் ரசிகர்கள் பேயறைந்தது போல் இருக்கின்றனர். ஏனென்றால் அதில் லோகி முற்றிலும் காதல் நாயகனாக மாறி இருக்கிறார். வெறும் 18 நொடி வீடியோவே ஒரு மார்க்கமாகத் தான் இருக்கிறது.

இவரும் ஸ்ருதியும் காதலர்கள் என்பது அந்த வீடியோவை பார்த்தாலே தெரிகிறது. அதில் இவர்களின் ஓவர் ரொமான்ஸ் தான் பார்ப்பவர்களை திகைக்க வைத்துள்ளது.

அதுவும் லோகேஷ் குருநாதர் பொண்ணு என்றும் பார்க்காமல் புகுந்து விளையாடி இருக்கிறார். ஸ்ருதியை கட்டி பிடிப்பது, முத்தம் கொடுப்பது என பலான சேட்டை செய்துள்ளார்.

இதுவே முழு பாடலும் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் படி இனிமேல் என்ற பெயரில் வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் பாடல் வரும் 25ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Trending News