ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பல பேரோட சாவ வச்சு சம்பாதிச்சதுல சக்ஸஸ் மீட்டா.? லோகேஷ் ஹீரோவின் நிஜ முகம்

Lokesh: இப்போதெல்லாம் படம் வெளியான மறுநாளிலேயே சக்சஸ் மீட் வைத்து கொண்டாடி பலருக்கும் ஷாக் கொடுக்கின்றனர் டாப் ஹீரோக்கள். ஏனென்றால் இது அவர்களுடைய கௌரவ பிரச்சனை. தன்னுடைய படம் வெற்றி என்றால் தான் அவர்களுக்கு லாபம்.

ஆனால் ஒரு படம் ஃப்ரீ ரிலீஸ்லயே போட்ட காசை எடுத்திருக்கிறது. அதை தாண்டி சாட்டிலைட் இன்னும் சில வழிகளிலும் கொள்ளை லாபம் பார்த்திருக்கிறது. ஆனால் அப்படம் வெற்றி என்பது இப்போது வரை யாருக்குமே தெரியாது. ஏனெனில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளியான அப்படத்திற்கு சக்சஸ் மீட் வைக்க அந்த இயக்குனர் விரும்பவில்லை.

தோல்வி படங்களை கூட வெற்றி என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிரபலங்கள் மத்தியில் இப்படியும் ஒருவரா என உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அப்படி ஒருவர் இருக்கிறார். இதன் மூலம் அவருடைய நிஜ கேரக்டரும் வெளிவந்திருக்கிறது. அவர் வேறு யாரும் கிடையாது லோகேஷின் நண்பரும் ஃபைட் கிளப் பட ஹீரோவுமான விஜய்குமார் தான்.

Also read: ரொமான்ஸ் வராத லோகேஷ் தயாரிப்பில் வெளியான வீடியோ.. லிப் லாக் உடன் ஃபைட் கிளப் பாடல்

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் உறியடி 2 படத்தை பற்றி பேசி இருந்தார். ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இரண்டாம் பாகத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

எப்போதும் தரமான படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றியும் பார்க்கும் சூர்யா இதன் மூலமும் அதிக லாபம் பார்த்தார். அதன்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தையும், அதனால் அப்பாவிகள் உயிர் போனதையும் நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்தக் கருவை வைத்து வெளியான இப்படம் வெற்றி அடைந்த போதும் சக்சஸ் மீட்டை கொண்டாட படகுழு விரும்பவில்லை.

இதைப் பற்றி தற்போது கூறியிருக்கும் விஜயகுமார் பல பேரோட சாவுல எப்படி சந்தோஷப்பட முடியும். அதனாலதான் 25வது நாளின் போது வெளியான போட்டோவில் கூட நாங்க யாருமே சிரிக்கல. இப்ப இந்த விஷயத்தை சொல்றதுக்கு காரணமே அந்த படம் தோல்வின்னு ஒரு கருத்து இருக்குது. ஆனா அப்படி இல்ல என அவர் கூறியிருப்பது பாராட்டக்கூடியதாக உள்ளது.

Also read: யாரு செத்தாலும் இந்த சண்டை மட்டும் சாவாது.. சம்பவத்திற்கு தயாராகும் லோகேஷின் Fight Club டீசர்

Trending News