லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகியிருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.
மேலும் வசூலிலும் கிட்டத்தட்ட 300 கோடியைத் தாண்டியுள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யின் தளபதி 67 வது படத்தை இயக்கயுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாகயுள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
அதில் நெல்சனை பற்றி இணையத்தில் நிறைய மீம்ஸ்கள் வருகிறது அதை பற்றி லோகேஷ்யிடம் கேட்டுயிருந்தனர். கடைசியாக விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக கேலி, கிண்டலுக்கு உள்ளானது.
இதனால் நெல்சன் எது செய்தாலும் அது ட்ரோல் செய்யப்படுகிறது. இதனால் நெல்சன் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். மேலும் தற்போது விக்ரம் படம் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருவதால் லோகேஷ் உடன் ஒப்பிட்ட நெல்சன் ட்ரோல் செல்கிறார்கள்.
இதற்கு பதிலளித்த லோகேஷ், இவ்வாறு இருவரையும் ஒப்பிட்டு பேசும் திரைப்பட பார்வையாளர்களின் நடத்தை வருத்தமும், வேதனையும் அளிப்பதாக கூறியிருந்தார். மேலும் நெல்சன் என்னுடைய நல்ல நண்பர். வெற்றி, தோல்வி என்பது யாருக்கும் வரலாம்.
இவ்வாறு ட்ரோல் செய்து தங்கள் வேலையை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு லோகேஷ் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் நெல்சன் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தை இயக்கயுள்ளார். மேலும் தற்போது அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார்.