ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

லோகேஷ் செஞ்சது மிகப்பெரிய தப்பு.. லியோ படத்தால் வெடிக்கும் சர்ச்சை

Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினி படத்தை எடுக்க உள்ளார். இந்நிலையில் கடைசியாக விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய லியோ படம் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. ஏனென்றால் இவர்களது காம்போவில் முன்பு வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இதையடுத்து மீண்டும் இவர்கள் இணைந்து லியோ படத்தில் பணியாற்றி இருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் ஏமாற்றத்தை தான் சந்தித்து இருந்தது. மேலும் லியோ படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களை தான் ஏற்றுக் கொள்வதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

அதே படத்தால் மற்றொரு பிரச்சனையை சந்திக்கிறார் லோகேஷ். லியோ படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்து இருந்தார் சின்மயி. இந்நிலையில் வைரமுத்து மீது சின்மயி மீடூ புகார் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் டப்பிங் யூனியனின் சந்தா கட்டாததால் சின்மயி நீக்கப்பட்டார்.

Also Read : கைதியாக வந்து லவ்வராக மனதைத் தொட்ட கண்ணா ரவியின் 5 படங்கள்.. பிள்ளையார் சுழி போட்டு லோகேஷ்

மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றபோது சின்மயி லைஃப் டைம் நம்பர் என்று பொய் சொன்னதால் டப்பிங் யூனியனுக்கு பல லட்சங்கள் செலவானதாக டப்பிங் யூனியன் சங்க தேர்தலில் போட்டியிட உள்ள ராஜேந்திரன் கூறியிருக்கிறார். மேலும் டப்பிங் யூனியன் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று லியோ படத்தில் சின்மயை டப்பிங் பேச வைத்தது லோகேஷ் செய்த தவறு என்று கூறியிருக்கிறார்.

மேலும் விரைவில் டப்பிங் யூனியன் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக நடிகர் ராதாரவி தலைவராக இருந்த நிலையில் இப்போது ராஜேந்திரனும் போட்டியிட இருக்கிறார். எனவே புதிய நிர்வாகம் அமைந்த பின்பு இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

Also Read : ஸ்ருதிஹாசன் உடன் லோகேஷ் செய்யப் போகும் தரமான சம்பவம்.. ஆண்டவர் கிட்டயே ஆசீர்வாதம் வாங்கியாச்சு

Trending News