செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கன்னட நடிகரை கொக்கி போட்டு இழுக்கும் லோகேஷ்.. கமுக்கமாக கட்டளை போட்ட ரஜினி

Actor Rajinikanth and Director Lokesh: ரஜினிக்கு, விக்ரம் படத்தை பார்த்த பின்பு இவருடைய மனதில் ஆழமாக பதிந்த ஒரு விஷயம் நாமும் இதே மாதிரி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக அதே இயக்குனரான லோகேஷிடம் எனக்கும் அதே மாதிரி ஒரு தரமான படத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அந்தப் படம் தான் என்னுடைய கடைசி படமாக நான் அறிவிக்க போகிறேன் என்றும் அதனால் மிகப் பிரமாண்டமாக அமைய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதுவும் அது எப்படி இருக்க வேண்டும் என்றால் இந்தியா முழுவதும் இந்த படத்தைப் பற்றி பேசணும். அதை தான் நான் எதிர்பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: தளபதியின் சூப்பர் ஸ்டார் கனவுக்கு செக் வைத்த ரஜினி.. ஜூன் மாத இறுதியில் தான் சம்பவமே இருக்கு

அதற்காக என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. அதே மாதிரி ஒரு கதையை செதுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இப்படி இவர் சொல்வதைப் பார்த்து லோகேஷ்க்கு பொறுப்பை விட இன்னும் அதிகமாக பயம்தான் கூடிக் கொண்டே வருகிறது. ஏனென்றால் ரஜினி அந்த அளவிற்கு இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.

அதனால் லோகேஷ் மற்றும் ரஜினி இது சம்பந்தமான விஷயங்களை அடிக்கடி பேசி வருகின்றனர். இன்னும் கூடுதல் சிறப்பாக இந்த படத்தில் ஏதாவது ஒரு ஸ்பெஷல் கொண்டு வர வேண்டும் என்பதற்காக கன்னடத்தில் மெகா ஹிட் சூப்பர் படமான கேஜிஎஃப் ஹீரோ யாஷை நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

Also read: ரஜினியின் டயலாக்கை அட்ட காப்பி அடித்த தளபதி.. மாணவர்களின் முன்னிலையில் உடைந்த சஸ்பென்ஸ்

அதுவும் இவர் நேரடியாக போய் கூப்பிட முடியாது என்பதால் மறைமுகமாக லோகேஷ்க்கு கட்டளை போட்டிருக்கிறார். இதனால் லோகேஷ் என்ன பண்ணுவது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் இவர் கதை எந்த மாதிரி அமையும் என்று போக போக தான் இவருக்கே புரியும்.

அப்படி இருக்கும் பொழுது அதற்குள் இந்த நடிகரை கூப்பிடுங்கள், அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினி ஆலோசனை சொல்வது இவருக்கு கொஞ்சம் எரிச்சல் ஊட்டும் விதமாக இருக்கிறது. ஆனாலும் இவரால் ஒன்னும் சொல்ல முடியாமல் தர்ம சங்கடத்தில் தவித்து வருகிறார். ரஜினியே பொருத்தவரை எப்படியாவது இந்த படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டு சரித்திர படமாக அமைய வேண்டும் என்பதுதான் இவருடைய ஆசை. அதற்காக பல வேலைகளை கமுக்கமாக செய்து வருகிறார்.

Also read: முழுக்க முழுக்க காமெடியில் வெளிவந்த ரஜினியின் 6 படங்கள்.. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் எஸ்கேப் ஆன தலைவர்

Trending News