Mr Bhaarath First Look Poster: இப்போதெல்லாம் இயக்குனர்கள் அடுத்தடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் லோகேஷ் ஜி ஸ்குவாட் என்ற நிறுவனத்தை தொடங்கி இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
![Mr Bhaarath](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/12/Mr-Bhaarath.webp)
அதன் மூலம் தற்போது யூடியூபர் பாரத் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதன் ப்ரோமோ வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.
பொதுவாக லோகேஷ் படம் கொஞ்சம் வன்முறையாக தான் இருக்கும். அதே போல் அவருடைய தயாரிப்பில் உருவாகும் படமும் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.
மிஸ்டர் பாரத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
அதை தீர்க்கும் பொருட்டு அந்த ப்ரோமோவில் லோகேஷ் ரத்தம் பவுடர் இல்லாமல் படம் இருக்க வேண்டும் என கூறுவார். அதிலிருந்தே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என உறுதியானது.
அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் மிஸ்டர் பாரத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அதில் பாரத் இரு கைகளிலும் பொம்மை துப்பாக்கி வைத்துக் கொண்டு கோட் சூட், கண்ணாடி என இருக்கிறார்.
அவரை ஹீரோயின் அணைத்தது போல் போஸ் கொடுத்துள்ளார். இவர்களை சுற்றி சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை துப்பாக்கி கார் என சகல விளையாட்டு பொருட்களும் உள்ளது.
இதை பார்க்கும் போதே இது குழந்தைகளுக்கான கதையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. எது எப்படியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.