சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சஞ்சய் தத்துக்கு மகன் விஜய் இல்லையாம்.. லோகேஷ் சொன்ன சுவாரஸ்யம்

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் இதில் நடித்திருப்பது தான்.

அதனாலேயே இப்படத்திற்கான ப்ரீ பிசினஸ் வியாபாரமும் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கிறது. இந்நிலையில் லோகேஷ் இப்படம் சம்பந்தமான சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை வெளிப்படையாக பகிர்ந்து உள்ளார். அதாவது சஞ்சய் தத் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்திருப்பது அனைவருக்கும் தெரியும்.

Also read: லண்டனில் மாமியார் வீட்டு விருந்து முடித்தவுடன் விஜய் செய்யப் போகும் சம்பவம்.. ஆட்டம் காண போகும் அக்கட தேசம்

சமீபத்தில் கூட அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பட குழு அட்டகாசமான ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது. அதில் ஆண்டனி தாஸ் என்னும் கேரக்டரில் நடித்துள்ள சஞ்சய் தத் படு மிரட்டலாக இருந்தார். அதற்கு நேர் மாறாக அவர் சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவும் இயல்பாக இருப்பாராம்.

அது பற்றி கூறிய லோகேஷ் படப்பிடிப்பு ஆரம்பித்த நான்கு நாட்களிலேயே அவர் என்னை மகன் என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார் என்று தெரிவித்துள்ளார். இது பெரும் ஆச்சரியமாக தான் இருக்கிறது. ஏனென்றால் இந்த படத்தின் மூலம் தான் சஞ்சய் தத்துக்கு லோகேஷ் பழக்கம் ஆகி இருக்கிறார்.

Also read: கமலோடு மோத போகும் சீயான்.. லோகேஷ் கணக்கை முடிக்க மணிரத்தினம் போடும் புது கணக்கு

அப்படி இருக்கும்போது நான்கு நாட்களிலேயே மகன் என்று கூறுகிறார் என்றால் எந்த அளவுக்கு லோகேஷ் அவரை இம்ப்ரஸ் செய்திருப்பார் என்று தெரிகிறது. மேலும் ஒரு இயக்குனராக லோகேஷ் பிறரை வேலை வாங்கும் விதமும் யோசிக்கும் திறனும் கூட சஞ்சய் தத்தை கவர்ந்திருக்கிறது.

அது பற்றி பேசிய லோகேஷ், ஆர்டிஸ்ட்டை அதிகம் தொந்தரவு செய்யாமல் வேலை வாங்குவது தான் என்னுடைய ஸ்டைல். அதற்கு ஏற்ற மாதிரி நான் பிளான் செய்து வைத்துக் கொள்வேன். இதனால் யாருக்கும் அதிக டேக் எடுக்கும் அவசியம் வராது. இந்த ஒரு விஷயம் சஞ்சய் தத்தை கவர்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். அந்த வகையில் லோகேஷ் பாலிவுட் டாப் ஹீரோவை இந்த அளவுக்கு இம்ப்ரஸ் செய்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Also read: முத்துவேல் பாண்டியன் அலப்பறையால் பின் வாங்கிய டாப் ஹீரோக்கள்.. மூன்று வாரம் வசூல் வேட்டை

Trending News