வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யை இழுத்துவிட்டு ரஜினியை காப்பாற்றிய லோகேஷ்.. கலாநிதி மாறன் வைத்த பொறியில் சிக்கிய லோகி

Lokesh and Rajini In Coolie: நாடி, நரம்பு, ரத்தம், புத்தி எல்லாத்துலயும் சினிமா வெறி ஊறிப்போன ஒருத்தரால் மட்டும்தான் இப்படிப்பட்ட படங்களை எடுக்க முடியும் என்று லோகேஷ் ஒவ்வொரு படத்திலும் நிரூபித்துக் காட்டி வருகிறார். அப்படிப்பட்ட இவர் 74 வயதில் இருக்கும் ரஜினியை கதாநாயகனாக வைத்து கோடிக்கணக்கான ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக தலைவர் 171 படத்தில் சம்பவத்தை செய்வதற்கு தயாராகி விட்டார்.

அந்த வகையில் நேற்று வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வேற லெவல்ல அமைந்திருக்கிறது. அத்துடன் கூலி என்ற டைட்டிலை வைத்து ரஜினி வில்லத்தனமாக இறங்கி வெறித்தனமாக பஞ்ச் டயலாக் பேசி புல்லரிக்க வைத்து விட்டார் என்றே சொல்லலாம்.

அதிலும் அனிருத்தின் மியூசிக் தலைவருக்கு மட்டும் எங்கிருந்துதான் இவ்வளவு உத்வேகம் வருகிறதோ தெரியல வேற லெவல்ல அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் கதை எது சம்பந்தமானது என்று ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. பொதுவாக லோகேஷ் மீது தொடர்ந்து வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்றால் எப்போதுமே போதை பொருட்களை வைத்தே எடுக்கப்பட்டு வந்ததுதான்.

ரஜினிக்காக புது டிராக்கை மாற்றிய லோகேஷ்

அப்படித்தான் மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களிலும் போதை சம்பந்தப்பட்ட கதையாகவே கொண்டு வந்தார். ஆனால் இது என்ன, எப்ப பார்த்தாலும் லோகேஷ் இது மாதிரியான கதையை இயக்கிக் கொண்டு வருகிறார் என்று அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்தது. ஆனால் தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தலைவர் 171 படமான கூலி படத்தில் தங்க கடத்தல் கதையாக மாற்றி அமைத்திருக்கிறார்.

அதற்கு காரணம் கலாநிதி மாறன், லோகேஷிடம் தலைவர் 171 கதை வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று கூறியதுதான். அது மட்டும் இல்லாமல் கமலுக்கு விக்ரம் படத்தின் கதை செட் ஆகிவிட்டது. அதை மாதிரி விஜய்யும் கொண்டு வந்து இழுத்து விட்டார். ஆனால் மாஸ்டர் படத்திலேயே ஏற்கனவே விஜய் அப்படி நடித்து விட்டதால் லியோ படம் சொதப்பிவிட்டது.

இதனால் மறுபடியும் போதை சம்பந்தமான கதை கொண்டு வந்தால் மக்களுக்கு போரடித்து விடும். அத்துடன் லோகேஷ் மீது இருந்த நம்பிக்கை போய்விடும் என்பதால் ரஜினிக்கு ஏற்ற மாதிரி கதையை மாற்றி தங்கக் கடத்தலை மையமாக வைத்திருக்கிறார். சூரியனை யாரும் கண்டதில்லை சூப்பர் ஸ்டாரை யாரும் வென்றதில்லை என்று சொல்வதற்கு ஏற்ப வயசானாலும் ஸ்டைலும் அழகும் இன்னும் குறையல. “கூலி- முடிச்சிடலாமா”

Trending News