திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விளம்பரத்திற்கு மட்டும் பல கோடியை வாரி இறைக்கும் லோகேஷ்.. கழுகின் வசூலை முறியடிக்க போடும் திட்டம்

Leo In Lokesh: தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரசிகர்களை குஷிபடித்த வரவிருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் சுவாரஸ்யமாக பல ட்விஸ்ட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனாலே ரசிகர்கள் மத்தியில் லியோ படம் அதிக ஹைப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது.

மேலும் இப்படத்தின் முதல் பாடலை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டு இருந்தார்கள். அனிருத் இசையில் விஜய் பாடிய நான் ரெடி தான் வரவா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இந்த மாத இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Also read: லியோ பட வசூலை தொம்சம் செய்ய ரிலீஸ் ஆகும் 3 முக்கிய படங்கள்.. லோகேஷ், தளபதியை புலம்ப விட்டுட்டாங்க!

மேலும் இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடத்தப் போவதாகவும் அல்லது மலேசியாவில் இருக்கலாம் என்றும் பல செய்திகள் உலாவி வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டு ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக சென்னையில் தான் நடக்கப் போகிறது என்று முடிவடைந்த நிலையில் மீண்டும் இதில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கிறது. அதாவது லியோ படுத்தின் ஆடியோ லான்ச் முழுக்க முழுக்க மலேசியாவில் தான் நடக்கப்போகிறது என்று தீர்மானம் ஆகிவிட்டது.

இதனால் அடுத்த மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரம் ஆடியோ லான்ச் வைக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். மேலும் அந்த நிகழ்ச்சியில் விஜய் கொடுக்கப்படும் பேச்சு தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இப்படத்தின் பிரமோஷனை அதிகரித்து வசூல் அளவிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் படக்குழு இறங்கி இருக்கிறது.

Also read: லியோ படத்தின் ஹைப்பை அதிகரிக்க செய்த வேலை.. நாலா பக்கமும் அடிபட்டு வரும் விக்ரம்

அதற்காக அனைத்து பக்கமும் அதிக அளவில் பிரமோஷன் செய்யப் போகிறார்கள். முக்கியமாக பாலிவுட்டில் மட்டுமே அதிக விளம்பரம் செய்வதற்கு பல கோடியை வாரி வழங்க இருக்கிறார்கள். கிட்ட கிட்டத்தட்ட விளம்பரத்திற்காக மட்டுமே 10 கோடி செலவழிக்க போகிறார்கள். எப்படியாவது இப்படத்தின் வசூல் அளவை அதிகரித்த விட வேண்டும் என்ற நோக்கில் லோகேஷ் முழு முயற்சியக பல வேலைகளை செய்து வருகிறார்.

அத்துடன் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வசூல் மற்றும் வரவேற்பு தற்போது ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. இதை முறியடிக்கும் விதமாக வசூல் அளவில் லியோ படத்தை டபுள் மடங்காக ஆக்க வேண்டும் என்பதில்தான் லோகேஷின் முழு கவனமும் இருக்கிறது. அப்படி மட்டும் லியோ படத்திற்கு வசூல் அதிகரித்து விட்டால் லோகேஷ் இன்னும் டிமாண்ட் இயக்குனராக மாறிவிடுவார்.

Also read: இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் லோகேஷ்.. ரிலீசுக்கு முன்பே ஒரு கோடிக்கு பார்ட்டி வைக்கும் பிரபல இயக்குனர்

Trending News