வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கூலி படத்தில் லோகேஷ் செய்த அதிரடி மாற்றம்.. ரஜினி அதிர்ச்சி.. பாக்ஸ் ஆபிஸில் தப்பிக்குமா?

சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அப்படத்தில் அதிரடி மாற்றங்கள் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கைதி படத்தின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பின், லோகேஷ் முன்னணி நடிகர்களின் குட் புக்கில் இடம்பிடித்தார். அதன்படி, விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் ஆகிய படங்களில் பணியாற்றினார். கடைசியாக லியோ படத்தை இயக்கினார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி அமைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இப்படத்தில் ரஜினியுடன் இணைத்து ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு குவிந்து வரும் நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த
நிலையில் தற்போது கூலி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ், கார்த்தி, கமல் நடித்த கைதி, விக்ரம் ஆகிய படங்களில் தனது ஸ்டைலில் படமெடுத்தார். ஆனால் விஜய்யின் மாஸுக்காக அவருடன் கூட்டணி வைத்து இயக்கிய மாஸ்டர், லியோ ஆகிய படங்களில் அவரது ஸ்டைலும் திரைக்கதையும் ஜஸ்ட் மிஸ்ஸானதாக ரசிகர்கள் கூறினர்.

லோகேஷா? ரஜினியா?

சினிமா விமர்சகர்களும் கலவையான விமர்சனங்களை கூறினர். இதனால் கூலி படத்தில் லோகேஷ் அவரது ஸ்டைலிலா? அல்லது ரஜினியின் ஸ்டைலில் படம் எடுப்பாரா என கேள்வி எழுந்தது. அதாவது, லோகேஷின் படம் என்றால் அது எல்.சி.யு, ஆனால் ரஜினி படம் என்றால் பக்கா கமர்ஷியல், பஞ்ச் டயலாக், குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோரும் பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். பாடல்கள் இருக்கும். அதிரடி ஆக்சன் இருக்கும்.

ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் லோகேஷ் தனது ஃபார்முலாவில் கூலி படத்தை இயக்கி வந்தார். ஆனால் ரஜினி இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சில கருத்துகள் கூறிய நிலையில், ரஜினிக்காக வேண்டி அதை லோகேஷ் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. ஏனென்றால் ஏற்கனவே வேறொரு ரஜினியை அவரது புதிய ஸ்டைலை இப்படத்தில் பார்க்கலாம் என லோகேஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.1000 கோடிக்கு அஸ்திவாரம்

அதன்படி, ரஜினிக்காக சில இடங்களில் பஞ்ச் டயலாக்கும் வைத்து, பாக்ஸ் ஆபீஸ் வசூல் மற்றும் ரஜினி ரசிகர்களை மனதில் வைத்து சில இடங்களில் ரஜினி ஸ்டைலை கலந்து கூலி படத்தை லோகேஷ் இயக்கி வருவதாக தகவல் வெளியாகிறது. இப்படம் ஜெயிலர் படத்தை தாண்டி வசூலிக்க வேண்டும் எனவும் குறிப்பாக ரூ.1000 கோடிக்கு இப்படம் அஸ்திவாரம் போடும் முதல் தமிழ் சினிமா படமாக இருக்கும் என தகவல் வெளியாகிறது.

Trending News