புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அத்தனை பேரையும் ஒரே நாளில் ஜம்மு காஷ்மீரில் ஆஜர் படுத்தும் லோகேஷ்.. பட்டைய கிளப்பும் தளபதி 67

விஜய்யின் வாரிசு வெற்றி படத்தை தொடர்ந்து இவரின் அடுத்த படமான தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்கவிருக்கிறார். இதற்கான வேலையில் மும்மரமாக லோகேஷ் களத்தில் இறங்கி இருக்கிறார். மேலும் இந்த படம் பெரிய பட்ஜெட் படமாகவும் எடுக்கப்படுவதால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்.

மேலும் தளபதி 67 படத்தில் விஜய்யுடன், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இவர்களுடன் இன்னும் சில நடிகர்களின் முக்கிய கதாபாத்திரத்தை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளனர். இதுவே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை பெரிய அளவில் தூண்டுகிறது.

Also read: இந்திய அளவில் பிரமிக்க வைத்த இயக்குனர் கூட்டணியில் தளபதியின்-69.. மார்க்கெட்டை அடித்து நொறுக்கும் விஜய்

இதற்கான படப்பிடிப்பு பிப்ரவரி 2 இல் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து ஆர்டிஸ்ட்களையும் காஷ்மீரில் ஒரே நேரத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்ற முடிவு செய்துள்ளார். ஆனால் ஒரே நேரத்தில் அனைவரையும் வர வைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் கிடையாது.

இதனால் லோகேஷ் அதிரடியாக ஒரு முடிவு செய்திருக்கிறார். இவர் சொன்னபடியே சூட்டிங் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தப் படத்திற்கு தேவையான 180 பேர் ஒரே சார்ட்டர் விமானத்தில் ஜம்மு காஷ்மீருக்கு அழைத்துச் செல்கிறார். இதனால் இவர் திட்டமிட்டபடியே பிப்ரவரி 2இல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும்.

Also read: லோகேஷ் யுனிவர்சலில் இணையும் சிம்பு.. மீண்டும் ஒரு தொட்டி ஜெயா

மேலும் இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளையும் முழு முயற்சியுடன் செய்ய வேண்டும் என்று லோகேஷ் ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்து செய்து வருகிறார். அவரின் வெற்றி படங்களை தொடர்ந்து இந்த படமும் ஒரு பெரிய வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்பது தான் இவருடைய ஒரே நோக்கம்.

இதை தொடர்ந்து இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் தளபதி 67 படம் கோடை விடுமுறையில் வெளியிடுவதற்காக திட்டமிட்டு வருகிறார்கள்.

Also read: ரோலக்ஸ் சூர்யாவைப் போல் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.. தளபதி 67-ல் முரட்டு மீசையுடன் வைரல் புகைப்படம்

Trending News