செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

புரளியை கிளப்பி விடும் லோகேஷ் டீம்.. இப்படி ஒரு விளம்பரம் தேவையா குருநாதா

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது படுஜோராக காஷ்மீரில் நடந்து வருகிறது. இப்படம் அக்டோபர் மாத ரிலீஸுக்காக உருவாகி வருகிறது. லியோ படத்தில் புது பிரபலங்கள் மற்றும் நிறைய வில்லன் நடிகர்கள் இடம்பெறுகிறார்கள்.

சமீபத்தில் லியோ படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற ஒரு செய்தி வெளியானது. ஏனென்றால் லோகேஷ் எல்சியுவில் லியோ படம் இடம்பெறுகிறது என்று கூறுவதால் ஏற்கனவே விக்ரம் படத்தில் நடித்த விஜய் சேதுபதி லியோ படத்திலும் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

Also Read : செம மாஸாக லியோ உடன் போஸ் கொடுத்த லோகேஷ்.. இணையத்தில் காட்டு தீயாக பரவும் புகைப்படம்

அதுமட்டுமின்றி லோகேஷ், விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். ஆனால் இந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என படக்குழு தரப்பில் இருந்து கூறி வருகிறார்கள். ஆனால் இந்த புரளியை கிளப்பி விட்டது லோகேஷ் டீம் தான்.

அதாவது லோகேஷ் டீமில் நிறைய உதவி இயக்குனர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் முக்கியமான நபர் ரத்தினகுமார். இவர் தான் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயன்படுத்திய கண்ணாடியை கையில் வைத்துக்கொண்டு இந்தப் புரளியை கிளப்பி விட்டார்.

Also Read : லியோ படத்தில் இணைந்த லெஜன்ட்.. காஷ்மீரில் இருந்து வெளியான பகிர் வீடியோ

இப்படி ரத்தினகுமார் வெளிப்படையாக சொல்லி உள்ளதால் லோகேஷுக்கு தெரியாமல் இந்த விஷயம் வெளியே வந்திருக்காது என பலரும் கருதுகிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது படக்குழுவே தாமாக முன்வந்து இந்த செய்தி பொய் என்று சொல்வதற்கான காரணம் என்ன என்றும் வினவி வருகிறார்கள்.

ஒருவேளை லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் ப்ரோமோஷனுகாக இவ்வாறு பொய்யை பரப்ப சொல்லி தனது உதவி இயக்குனர்களை தூண்டிவிடுகிறாரா ஏன் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் ரசிகர்கள் ஒரு புறம் புரளியை கிளப்பி விட்டால் படக்குழுவினரை இதுபோன்று செய்வது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

Also Read : அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய 9 பான் இந்தியா படங்கள்.. லியோ உடன் போட்டி போடும் சூர்யா

Trending News