புதன்கிழமை, ஜனவரி 22, 2025

லோகேஷ், மணிகண்டனையே தூக்கி சாப்பிட்ட பிரபலம்.. கமலுக்காக எந்த லெவலுக்கும் செல்ல ரெடி

Actor Kamal: எந்த கதாபாத்திரமாக இருப்பினும் அதை தத்ரூபமாய் கொண்டு செல்லும் உன்னத நடிகன் தான் கமல்ஹாசன். அவ்வாறு, இவரின் தீவிர ரசிகரான லோகேஷ் மற்றும் மணிகண்டனை தூக்கி சாப்பிடும் விதமாய் பிரபலம் மேற்கொண்ட செயல் பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.

உலகெங்கும் தன் நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை பெற்று வருகிறார் கமல். இந்நிலையில் கன்னட திரை துறையின் சூப்பர் ஸ்டார் ஆன ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ் குமார், கமலின் தீவிர வெறியன் ஆவார். இந்நிலையில் ஏற்கனவே விக்ரம் படத்தை மேற்கொண்ட லோகேஷ் கமலின் தீவிர ரசிகன் ஆவார்.

Also Read: கடைசி காலத்தில் அழைத்து அள்ளிக் கொடுத்த எம்ஜிஆர்.. நெகிழ்ந்து போன கமல்

கமலின் படங்களால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தை மேற்கொண்டு வெற்றி கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். அவரைப் போலவே, நகைச்சுவை நடிகராய் முயற்சித்து தற்பொழுது முன்னணி நடிகராய் மாறி வரும் மணிகண்டனும் கமலின் தீவிர ரசிகர் ஆவார்.

தற்போது இவர்களின் வரிசையில், கன்னட நடிகரான சிவராஜ் குமார் இடம் பெற்றுள்ளார். கன்னட மொழி சினிமாவில் பிரபலமான இவர் தற்பொழுது தமிழ் படங்களில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். அவ்வாறு நெல்சன் இயக்கத்தில் வெளிவரும் ஜெயிலர் படத்திலும் இவர் இடம் பெற்றுள்ளார்.

Also Read: கிரிக்கெட் வேற, சினிமா வேற. . சந்தானத்தால் திணறும் LGM வசூல்

தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ள இவர் கமலின் படங்களை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கும் தீவிர ரசிகர் ஆவார். அவ்வாறு ஃபர்ஸ்ட் டே தவறு விட்டால் அப்படத்தை பார்க்கவே மாட்டாராம். மேலும் கமலின் படங்கள் வெளி வருகிறது என்றால், அதற்கு முதல் நாளே ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் யூனிட்டுற்கு கால் செய்து விடுவாராம்.

அவ்வாறு கால் செய்து தன் தந்தையான ராஜ்குமாரின் மேனேஜர் பேசுவதாக குரலை மாற்றி 10 டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்து கொள்வாராம். இது போன்ற வேலைகளை செய்து எப்படியாவது கமலின் படத்தை பார்த்து விட வேண்டும் என பிளான் போடுவாராம். மேலும் கமல் படங்கள் என்றாலே, அப்பொழுதே தான் எந்த லெவலுக்கும் செல்ல ரெடியாக இருந்ததாகவும் இன்டர்வியூ ஒன்றில் தன் அனுபவத்தை கூறி கமலை நெகழ்ந்துள்ளார்.

Also Read: சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த மாரி செல்வராஜ்.. பகத் பாசிலால் வெடித்த பிரச்சனை

Trending News