தமிழ் சினிமாவே கொண்டாடும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறியுள்ளார். விக்ரம் படம் இவரை வேறு ஒரு உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் விக்ரம் படம் தற்போது வரை 400 கோடி வசூலை நெருங்கியுள்ளது. மேலும் லோகேஷ் மற்றும் விக்ரம் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது லோகேஷ் தயாரிப்பாளராக மாறப்போகிறார். அதாவது பெரும்பாலும் இயக்குனர்கள் தயாரிப்பாளராக மாறியுள்ளனர். மேலும் சமீபகாலமாக முன்னணி நடிகர்களும் தங்களுக்கு சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி கல்லா கட்டி வருகின்றனர்.
உலகநாயகன் கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். அதேபோல் சூர்யாவும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ரவுடி பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகின்றனர்.
தற்போது லோகேஷ் இதே முயற்சியில் இறங்கயுள்ளார். ஆனால் லோகேஷ் தயாரிப்பில் இறங்குவதற்கு முக்கிய காரணம் அவருடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க தான். ஏற்கனவே லோகேஷ் தன்னுடைய உதவி இயக்குனர்களை கமலிடம் சிபாரிசு செய்துள்ளாராம்.
இதனால் கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கயுள்ளார். அதேபோல் லோகேஷ் தன்னுடன் வேலை பார்த்த உதவி இயக்குனர்கள் மட்டுமல்லாமல் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கயுள்ளார்.
பணம் சம்பாதிக்க மட்டுமே தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் மத்தியில் திறமையான இயக்குனர்களும் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் லோகேஷ் இவ்வாறு செய்வதை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் எல்லாவற்றிலும் வித்தியாசமாக யோசித்து வருகிறார் லோகேஷ்.