திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கமலின் வாரிசுக்கு வாய்ப்பு கொடுக்க சொல்லி கெஞ்சிய லோகேஷ்.. ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

Rajini : 80களில் இருந்தே தற்போது வரை போட்டி நடிகர்களாக பார்க்கப்படுபவர்கள் ரஜினி, கமல். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு நடிகர்களுமே சினிமாவில் உயரத்தை அடைந்த பிறகு ஒன்றாக நடிக்கவில்லை.

இவர்கள் இருவரையும் சேர்த்து ஒரு படமாவது எடுத்து விட வேண்டும் என மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இப்போது ரஜினி படத்தில் கமலின் வாரிசை நடிக்க முயற்சி செய்துள்ளார் லோகேஷ்.

ரஜினி நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதில் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனையும் நடிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார் லோகேஷ்.

தலைவர் 171 இல் ஸ்ருதிஹாசன்

அதாவது இனிமேல் பாடலில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதனால் இவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு இருந்து வரும் நிலையில் தன்னுடைய படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்துள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டாரிடம் இதற்காக அனுமதியும் வாங்க சென்றுள்ளார். ரஜினிக்கு படத்தில் வேண்டுமானாலும் கமல் போட்டி நடிகராக இருந்தாலும் நிஜத்தில் இருவரும் நண்பர்கள் தான். இதனால் ஸ்ருதிஹாசன் நடிக்க எந்த மறுப்பும் சொல்லவில்லையாம்.

ஆகையால் தலைவர் 171 படத்தில் ஸ்ருதிஹாசனை தொடர்ந்து எக்கச்சக்க சினிமா பட்டாளம் நடிக்க உள்ளனர். அவர்கள் யார் யார் என்பது விரைவில் வெளியாக உள்ளது.

Trending News