செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லியோ ஆடியோ வெளியீடு, மண்ணை அள்ளிப் போட்ட லோகேஷ்.. திருப்பி கொடுக்க நினைத்த தளபதிக்கு விழுந்த அடி

Leo Audio Launch: வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் லியோ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதிலும் இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை எங்கு நடத்தப் போகின்றனர் என்பது தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

எப்போதுமே விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் தான் நடைபெறும். இதனால் இந்த முறை மிகவும் ஆர்வமாக விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் ஆடியோ லான்ச் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் போன்ற மூன்று பகுதிகளில் எங்கு நடக்கப்போகிறது, எப்போது என ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

Also Read: விஜய்யை போலவே அசிங்கப்பட்ட நடிகர்.. வழுக்கைத் தலை, கேவலமான மீசை என அடியோடு வெறுக்கப்பட்ட ஹீரோ

காரணம் ரஜினிக்கு இந்த விழாவில் பதிலடி கொடுப்பார், அதை எந்த ஊரில் கொடுக்கப் போகிறார் என்ற ஆர்வத்தில் இருந்து வருகிறார்கள். ஜெயிலர் பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ரஜினி சொன்ன காக்கா- பருந்து கதைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் லியோ ஆடியோ லான்ச்சில் குட்டி ஸ்டோரி ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் கொடுத்ததை மறுபடியும் அப்படியே தளபதி திருப்பிக் கொடுக்க நினைத்துக் கொண்டிருக்கையில், லோகேஷ் கனகராஜ் மொத்த பிளானிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டார். ரஜினிக்கு தமிழ்நாட்டில்தான் பதிலடி கொடுக்கணும் என தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் விதமாக தமிழ்நாட்டில் அதாவது மதுரையில் லியோ ஆடியோ லான்ச் நடக்க வாய்ப்பில்லை.

Also Read: மீண்டும் விஜய் மானத்தை வாங்கிய மக்கள் இயக்கம்.. அதிரடியாக கைது செய்யப்பட்ட செயலாளர்

ஏனென்றால் இவர் இயக்கிய விக்ரம் படத்தை விட லியோ வெளிநாடுகளிலும் வசூலில் தாறுமாறாக பின்னி பெடல் எடுக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டில் ஆடியோ லாஞ்சை வைக்க திட்டமிட்டுள்ளார். அதை துபாய் மற்றும் மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விஜய் எந்த ஊரில் நடத்த சொல்கிறாரோ அதை செயல்படுத்துவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் நடக்க மட்டும் வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். லியோ படத்தை வெளிநாட்டில் வெளியிடும் நிறுவனங்களுக்கு சாதகமாக விஜய் செய்யும் செயல் இது. எப்படியோ ஆனால் ரஜினியை எதிர்த்து பேசுவாரா மாட்டாரா என்பதுதான் இப்போது தளபதி ரசிகர்களின் கேள்வி.

Also Read: கைவிட்ட விஜய் தூக்கிவிடும் சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வமாக வெளியான அப்டேட்

Trending News