ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

உலக நாயகனை உப்புக்குச் சப்பாணியாக பயன்படுத்திய லோகேஷ்.. இது தெரியாமல் பூரித்துப் போன விஜய்

Vijay Lokesh: பொதுவாகவே விஜய் படம் என்றாலே திருவிழா மாதிரி கொண்டாடுவதற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டு தான் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது லோகேஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் லியோ படத்தை இன்னும் அதிக எதிர்பார்ப்புடன் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு இப்படத்தில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு வீடியோக்கள், பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் லோகேஷ் இயக்கக்கூடிய படங்கள் சஸ்பென்ஸ் ஆகவும், இதில் யார் எந்தெந்த ஹீரோக்கள் நடிக்கிறார்கள் என்று படம் பார்க்கும் வரை யாருக்கும் தெரியாத அளவிற்கு சீக்ரெட் ஆக நடிக்க வைத்து எடுக்கக் கூடியவர்.

Also read: லியோ மேடை கிடைக்காததால் பாட்டு வரிகள் மூலம் பதிலடி கொடுத்த விஜய்.. காக்கா கழுகு சண்டை ஓயாது போல

அப்படிப்பட்ட இவர் இந்த படத்திலும் நிறைய வித்தியாசமான காட்சிகள், பெரிய மல்டிஸ்டார்களை வைத்து எடுத்திருக்கிறார். அதிலும் LCU கதைக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுப்பார். அதனால் இதில் உலக நாயகன் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று பல பேச்சுக்கள் அடிபட்டது.

அந்த வகையில் கமல், லோகேஷ், விஜய் 3 பேரும் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதிலிருந்தே ரசிகர்கள் இப்படத்தில் உலக நாயகன் இருக்கிறார் என்று முடிவு கட்டி விட்டார்கள். ஆனால் தற்போது வந்த தகவலின் படி படத்தில் எந்தவித காட்சிகளிலும் கமல் வரப்போவதில்லை.

Also read: கமல் ஒருபோதும் ரஜினியாக முடியாது, விஜய் ஒருபோதும் அஜித்தாக முடியாது.! காரணம் இதுதான்

அதற்கு பதிலாக படத்தின் அறிமுகத்தில் கமல் வாய்ஸ் கொடுத்திருக்கிறார் என்பதுதான் உறுதியாக இருக்கிறது. இது தெரியாமல் விஜய், கமல் நம்மளுடைய படத்திற்காகத்தான் வந்திருக்கிறார் என்று ரொம்பவே பூரித்து போய் இருந்திருக்கிறார். ஆனால் அங்க போய் பார்த்தால் தான் தெரிகிறது வெறும் வாய்ஸ் கொடுக்க மட்டும் தான் லோகேஷ், கமலை உப்புக்கு சப்பானி ஆக பயன்படுத்துகிறார் என்று.

மேலும் கமல் இந்த படத்தில் மொத்தமாக 2 மணி நேரம் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். அதில் படம் துவங்கும் பொழுது ஆரம்பிக்கலாமா என்று விக்ரம் படத்தில் கமல் பேசியது போல, லியோ படத்திலும் கமல் அவருடைய ஸ்டைலில் பேசி இருக்கிறார். இதுதான் லோகேஷின் யுக்தி.

Also read: லோகேஷ், விஜய் மோதலால் வெடிக்கும் சர்ச்சை.. இமேஜை தொட்டு பார்த்ததால் வந்த வினை

Trending News