திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலுக்கு செய்யாத பிரம்மாண்டத்தை விஜய்க்கு செய்யும் லோகேஷ்.. கோவைக்கு படையெடுக்க போகும் தளபதி வெறியர்கள்

Director Lokesh: நடிகர்களின் விருப்பமான இயக்குனராக இருந்து வரும் லோகேஷ் தற்போது தளபதி விஜய்யின் லியோ படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த சூழலில் படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் சமயத்தில் லோகேஷ் இதுவரை செய்யாத பல விஷயங்களை லியோ படத்தில் செய்து வருகிறார்.

இப்படத்திற்கு முன்னதாக கமலின் விக்ரம் படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவை மீறி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் கமலுக்கு செய்யாத பிரம்மாண்டத்தை விஜய்க்கு செய்யப் போகிறார் லோகேஷ். அதாவது ரசிகர்கள் எந்த படத்தை பார்க்க போகிறோம் என்று தீர்மானிக்கும் போது திரையரங்குகளையும் பார்த்து தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

Also Read : இந்த ஆண்டு யாருமே பண்ணாத வசூலை வாரி குவிக்கும் ரஜினி.. அஜித், விஜய், ps2 படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்

இப்போது உள்ள நவீன காலகட்டத்திற்கு ஏற்ப திரையரங்குகளும் பல வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில் முதல் முதலாக கோயமுத்தூரில் ஐமேக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன சிறப்பு அம்சம் என்றால் 12 சேனல்களின் ஒலி அமைப்பை இது கொண்டிருக்கும்.

அதோடு மட்டுமல்லாமல் துல்லியமான கிரிஸ்டல் கிளியர் காட்சிகளை கொண்டுள்ளதால் புதுவிதமான அனுபவத்தை ஐமேக்ஸ் கொடுக்கும். இந்நிலையில் லியோ படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதற்காக லோகேஷ் முயற்சித்து வருகிறாராம். மேலும் இந்த திரையரங்குகளில் படம் வெளியானால் எப்படியும் ஆயிரம் ரூபாய் தாண்டி டிக்கெட் விலை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read : தமன்னா நடிப்பில் மோசமாய் மொக்கை வாங்கி 5 படங்கள்.. ஏண்டா நடிக்க வந்தோம்னு நினைக்க வைத்த விஜய்

மேலும் தளபதி வெறியர்கள் எவ்வளவு செலவு ஆனாலும் லியோ படத்தை ஐமேக்ஸ் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காக கோவையை நோக்கி படையெடுக்க இருக்கிறார்கள். லியோ படம் மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு படங்களும் ஐமேக்ஸ் தியேட்டரில் வெளியிட முயற்சி செய்து வருகிறார்கள்.

அதாவது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் படமும், பிரபாஸின் சலார் படமும் இந்த திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்களாம். மேலும் லியோ படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தளபதி ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : விஜய், கமலை காலி செய்ய போகும் 4 நாள் வசூல்.. வெறியோடு களத்தில் குதித்த ஜெயிலர்

Trending News