வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஓவர் பில்டப் கொடுத்து அசிங்கப்பட்ட லோகேஷ்.. சொதப்பலாக அமைந்த லியோ இரண்டாம் பாதி

Leo 2nd Half: ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்று சொல்வார்கள் அது போலத்தான் லியோ படத்திற்கு ஓவராக எதிர்பார்ப்பை வைத்ததால் ரசிகர்கள் தற்போது நம்பி ஏமாந்து இருக்கிறார்கள். அதாவது நேற்று வெளியான லியோ படம் பலதரப்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்னதான் லோகேஷ் விஜய் படமாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று படத்தைப் பார்த்தவர்கள் நொந்து போய் வருகிறார்கள்.

அதிலும் முதல் பாதியை சஸ்பென்ஸ் ஆக டாப்புக்கு கொண்டு வந்த நிலையில் இரண்டாம் பாதி அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. தேவை இல்லாமல் அர்ஜுன், சஞ்சய் தத் கேரக்டர்களை கொண்டு வந்து படத்தை குழப்பி விட்டிருக்கிறார். அதுவும் ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு இந்த மாதிரியான ஒரு மொக்கை சீன் ரொம்பவே அதிருப்தியைக் கொடுக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

அதே மாதிரி முதல் பாதியில் குறைய சொல்ல முடியாத அளவிற்கு ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் வைத்து பக்கவாக அமைந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சியை கொஞ்சம் கம்மி பண்ணி இருக்கலாம். அத்துடன் இன்னும் அதிக முக்கியத்துவம் இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தால் படம் நன்றாக அமைந்திருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அத்துடன் இரண்டாம் பாதியில் அதிகமான சண்டைக் காட்சிகளை வைத்து திகட்டும் படியாக இருந்ததால் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. ஆக மொத்தத்தில் ஒரு தடவை இந்த படத்தை பாத்துட்டு போகலாம் அவ்வளவுதான் என்று லியோ படத்திற்கு கிடைத்த விமர்சனம். அந்த வகையில் தற்போது வெளிவந்த தகவலின் படி இரண்டாம் பாதியில் அதிக கவனத்தை லோகேஷ் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சொல்லப் போனால் இரண்டாம் பாதியை லோகேஷ் எடுக்கவில்லை என்பது தெரிகிறது. எப்படியும் இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் லோகேஷ் இரண்டாம் பாதியை அசால்ட் ஆக விட்டுவிட்டார் என்பது அந்தப் படத்தின் காட்சிகளை வைத்து தெரிகிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி இவர்கள் ஆயிரம் கோடி வசூலை தொட்டுவிடும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் லியோ படம் சராசரியான விமர்சனத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் மட்டுமே இதை ஆரவாரமாக கொண்டாடி வருகிறார்கள் என்பது போல் தெரிகிறது.

Trending News