செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கூரைய பிச்சுகிட்டு கொட்டும் காசு.. பல கோடிகளில் பிரம்மாண்ட வீட்டை வாங்கிய லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் காட்டில் தற்போது அதிர்ஷ்ட மழை கொட்டி வருகிறது. விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வரும் அவருடைய ஒவ்வொரு அசைவையும் மீடியாக்கள் உற்று நோக்கி கவனித்து வருகிறது. அந்த அளவுக்கு அவருடைய திரைப்படங்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இது எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் கமல்ஹாசன் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படம் தான். இதற்கு முன்பு லோகேஷ் கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களின் மூலம் அனைவரையும் மிரட்டி இருந்தாலும் விக்ரம் திரைப்படம் தான் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

Also read: வசூல்ராஜாவை வச்சு செய்த ரிலீஸ்.. என்னடா இது தளபதி விஜய்க்கு வந்த சோதனை

அந்த வகையில் அவர் இப்போது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளுக்காக பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் அவர் இப்போது ஒரு பிரம்மாண்ட வீட்டையும் வாங்கி இருக்கிறார். நடிகர் விஜய் எப்படி ஒரு பிரம்மாண்டமான அலுவலகத்தை அடுக்குமாடி குடியிருப்பில் உருவாக்கி நடத்தி வந்தாரோ அதேபோன்று லோகேஷும் பிரம்மாண்ட அலுவலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அதாவது கேகே நகரில் இருக்கும் ஒரு ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கி இருக்கும் லோகேஷ் அதன் முதல் தளத்தை அப்படியே அலுவலகமாக மாற்றி விட்டாராம். மேலும் அந்த அலுவலகத்தில் சகல வசதிகளும் இருக்கும்படி அவர் தயார் செய்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதே அப்பார்ட்மெண்ட்டின் கடைசி தளத்தையும் அவர் வாங்கி இருக்கிறார்.

Also read: விஜய்யை ஓரங்கட்டி வெற்றி கண்ட தனுஷ்.. சைலன்ட்டாக காரியத்தை சாதித்த வாத்தி

அதில் அவர் குடும்பத்துடன் வசிப்பதற்கான பிரம்மாண்ட வீட்டை உருவாக்கும் முடிவில் இருக்கிறாராம். ஏற்கனவே லோகேஷ் போயஸ் கார்டனில் ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். அதை தொடர்ந்து இப்போது கே கே நகரிலும் வீடு, அலுவலகம் என இரண்டையும் பல கோடிகளை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

மேலும் அலுவலகம் மற்றும் வீடு இரண்டையும் பிரம்மாண்டமாகவும், ஆடம்பரமாகவும் உருவாக்குவதற்கான அனைத்து வேலைகளும் இப்போது செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே டாப் கியரில் செல்லும் லோகேஷுக்கு இப்போது அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டி இருக்கிறது. அதை நன்றாக புரிந்து கொண்ட லோகேஷும் வேகவேகமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Also read: லியோ படத்தில் இணைந்த லெஜன்ட்.. காஷ்மீரில் இருந்து வெளியான பகிர் வீடியோ

Trending News