வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கேமியோ கேரக்டருக்கு களம் இறங்கிய லோகேஷ்.. நடிப்புக்கு போட்ட முதல் பிள்ளையார் சுழி

Lokesh Acting begin: முன்னணி நடிகர்களுக்கு தொக்காக அமைந்த ஒரு இயக்குனர் தான் லோகேஷ். இவர் எடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் சஸ்பென்ஸ் ஆகவும், திரில்லர் படமாகவும் தான் விறுவிறுப்பை எகிற வைத்திருக்கிறது. அத்துடன் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்திற்கும் கனெக்ஷன் இருக்கிற மாதிரி ஏதாவது ஒரு விதத்தில் முடிச்சு போட்டு கதையைக் கொண்டு வருவது இவருக்கு கைவந்த கலை.

அப்படிப்பட்ட இவருடைய இயக்கத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி கமல், விஜய், சூர்யா, கார்த்தி மற்றும் ரஜினிக்கு ஒரு படம் என்று பிசியாகவே மாறிவிட்டார். தற்போது இயக்குனர் பாணியையும் தாண்டி தயாரிப்பிலும் இறங்கி விட்டார்.

அப்படி இவர் தயாரித்த படம் தான் FLIGHT CLUB. இப்படத்தில் இவருடைய நெருங்கிய நண்பர் உரியடி ஆக்டர் விஜயகுமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் நடிப்புக்கும் பிள்ளையார் சுழி போட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பிற்கு போகலாம் என்பதற்காக  கேமியோ தோற்றத்தில் என்டரி கொடுத்திருக்கிறார்.

Also read: பெயர் கூட தெரியாமல் சப்போர்ட் கேரக்டரில் பின்னும் 6 நடிகர்கள்.. அந்த நடிகரை விட்டுக் கொடுக்காத லோகேஷ்

அதாவது ஆர் ஜே பாலாஜி நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வருகிற 25 ஆம் தேதி சிங்கப்பூர் சலூன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் ஒரு கெஸ்ட் ரோலில் லோகேஷ் வருகிறார். இதுவரை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பார்த்த லோகேஷை முதல் முறையாக படங்களில் ஒரு கேரக்டராகவும் நம் பார்க்கப் போகிறோம்.

இதெல்லாம் சும்மா ட்ரையல் தான் என்பதற்கு ஏற்ப, இதை வைத்து படிப்படியாக நடிப்பிற்குள் நுழையப் போகிறார் . சும்மாவே ஹீரோக்களை வைத்து செய்யும் லோகேஷ் அவர் நடிக்கப் போகிறார் என்றால் அதற்கேற்ற மாதிரி ஒரு பிரம்மாண்டமான நடிப்பை கொடுத்து விடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் இவருடைய டார்கெட்டான குறிப்பிட்ட படங்களை எடுத்து முடித்துவிட்டு அதன் பின் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வாய்ப்பு இருக்கிறது.

ஆர் ஜே பாலாஜிக்காக இல்லாட்டாலும், லோகேஷை திரையில் பார்த்து ரசிப்பதற்காகவே சிங்கப்பூர் சலூன் படத்தை பார்ப்பதற்கு மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்றைக்கு வெளிவந்த ட்ரெய்லர் பார்க்கும்பொழுது ஆர்ஜே பாலாஜியின் கனவை நிறைவேற்றிய பிறகு அதில் சீப் கெஸ்ட் ஆக வருகிறார் லோகேஷ். இந்த ஒரு டிராக் கண்டிப்பாக லோகேஷின் கேரியரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

Also read: பவுடர், ரத்தக்களரி இல்லாத சினிமா.. லோகேஷ், நெல்சனை குத்தி பேசிய சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்

Trending News