திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடுத்த ஹீரோவை உறுதி செய்த லோகேஷ்.. பிரம்மாண்ட தயாரிப்பாளர் கூட்டணியில் வெளிவர உள்ள அப்டேட்

Director Lokesh: பொதுவாக நடிகர்களின் நடிப்பு தான் எல்லா பக்கமும் பெரிய அளவில் பேசப்பட்டு வரும். ஆனால் அந்த இடத்தை லோகேஷ் இயக்குனராக இருந்து பிடித்து விட்டார். தற்போது எங்கு திரும்பினாலும் லோகேஷின் புராணம் தான் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இவர் எடுத்து வந்த படங்கள் அனைத்தும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பார்க்க ஆர்வத்தை தூண்டி வருகிறது.

கடந்த வருடம் எப்படி கமலுக்கு விக்ரம் படத்தை கொடுத்து சினிமாவில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தினாரோ, அதேபோல் இந்த ஆண்டு விஜய்யை வைத்து லியோ படத்தில் தரமான சம்பவத்தை கொடுக்கப் போகிறார். ஒவ்வொரு படத்திற்கும் லோகேஷின் பிரம்மாண்டம் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

Also read: கமலை பார்த்து சினிமாவில் சாதித்த 6 இயக்குனர்கள்.. பாலிவுட்டை மிரள விடும் லியோ லோகேஷ்

இதற்கு அடுத்து லோகேஷ் அடுத்த படத்திற்கான ஹீரோவை உறுதி செய்து விட்டார். அதாவது இவருடைய படத்தில் நடிக்க மாட்டோமா என்று எத்தனையோ பேர் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், ரஜினி இவரை தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு நான் உங்க கதையில் நடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கேட்டுக் கொண்டார்.

அதன்படி தற்போது லோகேஷ் இயக்கவிருக்கும் படம் ரஜினியின் 171 வது படம். இதை தற்போது உறுதி செய்த நிலையில் லோகேஷ் கூறியது இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் இப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிடுவார் என்று கூறியிருக்கிறார். மேலும் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்கப் போவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான்.

Also read: லோகேஷ் LCU-வில் இணைந்த சூப்பர் ஸ்டார்.. கமலஹாசனுடன் செய்ய போகும் அடுத்த சம்பவம்

அதனால் கூடிய விரைவில் அனைவரும் எதிர்பார்த்தபடி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது. அதே நேரத்தில் ரஜினி தற்போது நடித்துள்ள ஜெயிலர் மற்றும் லால் சலாம் படத்திற்கு பிறகு ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலு இயக்கத்தில் 170 ஆவது படத்தை கமிட் செய்திருக்கிறார். இப்படம் முடிந்த பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் லோகேஷ் கூட்டணியில் படம் துவங்க இருக்கிறது.

அதே மாதிரி லோகேஷ், ரஜினி படத்தை முடித்த பிறகு அவருடைய கைதி படமான இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார். அத்துடன் லோகேஷ் சில விஷயங்களையும் முன்னிறுத்தி வருகிறார். அதாவது இவருக்கு பெரிய அளவில் சினிமா துறையில் ஆர்வம் இல்லையாம். குறிப்பிட்ட பத்து படங்களை எடுத்த பிறகு சினிமாவிலிருந்து விலகப் போவதாக கூறி வருகிறார். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.

Also read: அட இந்தப் படத்தின் கதை தான் விக்ரம் படமா?.. அட்லீயின் லிஸ்டில் சேர்ந்த லோகேஷ் கனகராஜ்

Trending News